உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  அபுதாபி அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

 அபுதாபி அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

துபாய்: அபுதாபி அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் வெளிப்பகுதியில் நேற்று ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பாதுகாப்பு படையினரும், அவசரகால மீட்பு படையினரும் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்றும் அணு உலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி