மேலும் செய்திகள்
கட்டிய சில வாரங்களில் சீனாவில் நொறுங்கிய பாலம்
1 hour(s) ago
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு
18 hour(s) ago | 5
ஹெச்1பி விசா விவகாரம்; யு-டர்ன் அடித்த டிரம்ப்
22 hour(s) ago | 31
கபோரோன்: அரசுமுறைப் பயணமாக போட்ஸ்வானா நாட்டிற்கு சென்றுள்ள நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, எட்டு சிவிங்கி புலிகளை இடமாற்றம் செய்யும் திட்டத்தை இறுதி செய்தார். ஆப்ரிக்க நாடுகளான அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவிற்கு ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக, நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றுள்ளார். இந்திய ஜனாதிபதி ஒருவர் இந்த ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்வது இதுவே முதல்முறை. கடந்த 10ம் தேதி அங்கோலா சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கோலா அதிபர் ஜோவா மேனுவேலை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகள் இடையே ராணுவம், எரிசக்தி பாதுகாப்பு, விவசாயம், பெட்ரோலிய சுத்திகரிப்பு உட்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்த நாட்டின் 50வது சுதந்திர தின விழாவிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, மூன்று நாள் பயணமாக போட்ஸ்வானா நாட்டிற்கு அவர் நேற்று சென்றார். தலைநகர் கபோரோனில் உள்ள விமான நிலையத்தில், அந்த நாட்டின் அதிபர் டுமா கிதியோன் போகோ நேரில் வரவேற்றார். இந்திய அரசின் தனித்துவமான வனவிலங்கு பாதுகாப்பு முயற்சியான 'புராஜெக்ட் சீட்டா' திட்டத்தின் ஒரு பகுதியாக, எட்டு சிவிங்கி புலிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அதிபர் போகோ கூறினார். ''போட்ஸ்வானா மக்கள், சிவிங்கி புலிகளை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நன்றி. நாங்கள் அவற்றை நன்றாக கவனித்துக்கொள்வோம்,'' என்று ஜனாதிபதி முர்மு தெரிவித்தார். நம் நாட்டில், 1952ல் சிவிங்கி புலி இனம் அழிந்துவிட்டது. இதையடுத்து, நம் பிரதமர் நரேந்திர மோடி, நமீபியா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சிவிங்கி புலிகளை நம் இந்தியாவிற்கு கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கடந்த, 2022ல் துவங்கிய இந்த திட்டத்தின்படி, மத்திய பிரதேசத்தின் குனோ உயிரியல் பூங்காவில், தற்போது 27 சிவிங்கி புலிகள் உள்ளன.
1 hour(s) ago
18 hour(s) ago | 5
22 hour(s) ago | 31