உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபராக பதவி வகிக்க தகுதியானவர்: கமலாவுக்கு டாக்டர்கள் சர்பிடிகேட்

அதிபராக பதவி வகிக்க தகுதியானவர்: கமலாவுக்கு டாக்டர்கள் சர்பிடிகேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தனது உடல்நலன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதிபராக பதவி வகிப்பதற்கான மனநிலை அவருக்கு உள்ளது என அதில் டாக்டர்கள் சான்று அளித்து உள்ளனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீசும்(59), குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும்(78) போட்டியிடுகின்றனர். இருவருக்கு இடையிலான போட்டி கடுமையாக உள்ளது. இந்நிலையில் கமலா ஹாரீஸ் சார்பில், மருத்துவ குழுவினர் அவரது உடல் நலன் குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை குறிப்பிடத்தக்கது. அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதுடன், உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மன நிலையுடன் உள்ளார். அவர் புகையிலை மற்றும் ஆல்கஹாலை பயன்படுத்துவதில்லை. அவருக்கு ஒவ்வாமை பாதிப்பு உள்ளது எனக்கூறப்பட்டு உள்ளது.இது தொடர்பாக கமலா ஆதரவாளர்கள் கூறுகையில், 78 வயதாகும் டிரம்ப் தனது உடல்நலன் குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட மறுக்கிறார் என்பதை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கமலா ஹாரீஸ் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். வயது முதிர்வு காரணமாக ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார். தற்போது , அதிக வயதான வேட்பாளர் டிரம்ப் தான் என்பதை எடுத்து காட்ட அவர் விரும்புகிறார். டிரம்ப்பை விட வயது குறைவு, போதுமான மன தைரியம் ஆகியவை இருப்பதை காட்ட முயற்சி செய்கிறார். இதன் மூலம் இதுவரை யாருக்கு ஓட்டுப்போடுவது என முடிவு செய்யாமல் உள்ள வாக்காளர்களை கவர முடியும் என கமலா ஹாரீஸ் நம்புகிறார். இவ்வாறு அவர்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Easwar Kamal
அக் 13, 2024 22:09

ட்ரம்பன் மற்றும் கூடியரசு கட்சி சேர்ந்தவர் கட்டி விடுகின்ற கதைக்கு முற்று புள்ளி வைக்கவே இந்த டாக்டர் certficate.


Sudha
அக் 13, 2024 16:39

இதுபோன்ற ரிப்போர்ட் கொடுத்து இருந்தால் பைடன் வந்திருக்கவே மாட்டார், டிரம்ப் கொஞ்சம் செலவு செய்து வாங்க வேண்டும், கொஞ்சம் இந்தியாவை பற்றி, மற்ற உலக நாடுகள் பற்றி ஏதாவது எழுதுங்கள், அமெரிக்கா எப்படி இருந்தால் என்ன


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 13, 2024 11:51

அதிபராகவோ / பிரதமராகவோ / ஜனாதிபதியாகவோ தேர்ந்தெடுக்கப்பட விரும்பும் போட்டியாளர்கள் உடல், மன நலம் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பது எங்குமே நியதிதான் ....... நமது அரசியல் சட்டத்திலும் இது தெளிவாக உள்ளது ..... அதுக்காக அழகிப்போட்டியில் ஏன் இடவொதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்று கேட்பவருக்கு தகுதி இருக்கா ன்னு என்னை கேட்காதீங்க ....


raja
அக் 13, 2024 09:35

இதுகெல்லாமா டாக்டர் சர்டிஃபிகேட் வேண்டும்..... இந்தியாவில் இதுபோல் இருந்தால் இப்போ இருக்கும் ஒருத்தன் எம் பி யோ எம் எல் ஏ வோ ஆக முடியாது....முக்கியமா ஒன்கொள் திருட்டு திராவ் ட ஒன்கொள் கூட்டம் அடித்து விரட்ட படும்...


பாமரன்
அக் 13, 2024 08:36

அந்த கடைசி வரியில் இருப்பது மாதிரி யோசிக்க அமெரிக்க வாக்காளர்கள் பெரிய முட்டாள்களா இருப்பாங்களான்னு தெர்ல... மோடி வாய்கன்னு ஒவ்வொரு தபா அவர் அமெரிக்கா போகும் போதும் கூவும் கூட்டம் கொஞ்சம் இருப்பதால்... வாய்ப்பிருக்கலாம். என்ன நான் சொல்றது... மத்தபடி நான் அமீரிக்கா போனதில்லை... சொம்மா ஒரு அசம்ப்ஷன்தான்... கும்மிடிப்பூண்டி தாண்டாத பகோடாஸ் உபி பற்றி எழுதறப்ப திட்டுற மாதிரி நம்மையும் சொல்லிட கூடாதுல்ல... அதான் டிஸ்க்ளைமர் போட்டுட்டேன்...


புதிய வீடியோ