வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதனால் என்ன எலான் மஞ்ச கடுதாசி கொடுத்து விட்டாரா, வேலைய பாருங்க
மஸ்க் அல்லது அவரது நண்பர்கள் நெட்ஃப்ளிக்ஸ் பங்குகளை ஷார்ட்-ஸேல் செய்தார்களா என்று விசாரணை நடத்தப்பட வேண்டும்
சொல்பவனை வைத்துதான் தீர்வுபோல?
வாஷிங்டன்: நெட்பிளிக்ஸ் தளத்தை குறை கூறி எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு காரணமாக, அந்த நிறுவனத்தின் மதிப்பு பங்குச் சந்தையில் 15 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.தனது நெட்பிளிக்ஸ் சந்தாவை ரத்து செய்த தொழிலதிபர் எலான் மஸ்க், அந்த நிறுவனத்தை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அவர், ''உங்கள் குழந்தைகளின் நலனுக்காக நெட்பிளிக்ஸ் சந்தாவை ரத்து செய்யுங்கள்'' என்றார். 'டெட் எண்ட்: பாராநார்மல் பார்க்' என்ற நெட்பிளிக்ஸ் அனிமேஷன் தொடரை உருவாக்கிய ஹமிஷ் ஸ்டீல் மீது தான் எலான் மஸ்கிற்கு கோபம் ஆரம்பித்தது. ஹமிஷ் ஸ்டீல் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட பழமைவாத ஆர்வலர் சார்லி கிரிக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தை குறை கூறி எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு காரணமாக, அந்த நிறுவனத்தின் மதிப்பு பங்குச் சந்தையில் 15 பில்லியன் டாலர் சரிந்துள்ளது. ஒரு பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் என்ன எலான் மஞ்ச கடுதாசி கொடுத்து விட்டாரா, வேலைய பாருங்க
மஸ்க் அல்லது அவரது நண்பர்கள் நெட்ஃப்ளிக்ஸ் பங்குகளை ஷார்ட்-ஸேல் செய்தார்களா என்று விசாரணை நடத்தப்பட வேண்டும்
சொல்பவனை வைத்துதான் தீர்வுபோல?