உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் பார்லி.,யை கலைக்க சொன்ன எலான் மஸ்க் பேச்சுக்கு கண்டனம்

பிரிட்டன் பார்லி.,யை கலைக்க சொன்ன எலான் மஸ்க் பேச்சுக்கு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: 'பிரிட்டன் பார்லிமென்டை கலைக்க வேண்டும்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோவதாகவும், அவர்களை திருப்பி அனுப்பும் படியும் வலியுறுத்தி, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், 'யுனைட் தி கிங்டம்' என்ற பெயரில் லண்டனில் பேரணி நடந்தது. இதில், 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கு போட்டியாக, 'பாசிசத்துக்கு எதிரான அணிவகுப்பு' என்ற பெயரில், 'ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்' என்ற குழு போராட்டம் நடத்தியது. இதில், 5,000 பேர் பங்கேற்றனர். இரு தரப்பும் மோதலில் ஈடுபடாமல் தடுக்க 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில், 26 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டனர். யுனைட் தி கிங்டம் பேரணியில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் உரையாற்றினார். அப்போது, 'பிரிட்டன் பார்லி.,யை கலைக்க வேண்டும். அங்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும். இடதுசாரி கட்சிகள் கொலைகார கட்சிகள்' என, அவர் பேசினார். இநநிலையில், எலான் மஸ்க்கின் இந்த பேச்சுக்கு பிரிட்டன் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 'வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய எலான் மஸ்க்கை கண்டிக்க வேண்டும். அவரது பேச்சு பொருத்தமற்றது. அவருக்கு எதிராக தடை விதிக்கப்பட வேண்டும்' என, அவர்கள் கொதித்தெழுந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mecca Shivan
செப் 16, 2025 15:47

டெஸ்லாவிற்கு தடைவிதித்தால் அவன் சரணடைந்துவிடுவான்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 16, 2025 14:09

இங்கிலாந்து அழிவதை பெரும்பாலான உலகமக்கள் மகிழ்வுடனேயே பார்ப்பார்கள். உலகத்தில் தோன்றிய இனங்களிலேயே மிகவும் பேராசை கொண்ட, சர்வாதிகார எண்ணம் கொண்ட இனம் எது என்றால் அது ஆங்கிலோ சாக்ஸன் எனும் ஆங்கிலேயர்கள்தான். அவர்களின் முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு எல்லையே இல்லை.


Venkatesan Srinivasan
செப் 16, 2025 10:43

பொதுவாக எந்த ஒரு வெளிநாட்டு மக்களையும் தங்கள் நாட்டில் நிரந்தர பிரஜையாக தங்கி இருக்க வளைகுடா நாடுகள், அரபு தேசங்கள் மற்றும் சீனா அனுமதிப்பதில்லை. வெளிநாட்டினர் வேலை பார்க்கலாம். வேலை முடிந்தவுடன் கிளம்பிவிட வேண்டும். ஆகவே அங்கு ஊடுருவல் காரர்கள், இனவெறி முதலியன தலை தூக்குவது இல்லை. மேற்கத்திய நா


ராமகிருஷ்ணன்
செப் 16, 2025 09:18

இங்கிலாந்து நாட்டினை இந்தியாவுக்கு அடிமைநாடாக ஒப்பந்தம் செய்து ஆட்சியை மோடிஜீயிடம் ஒப்படைக்க வேண்டும். பிரதிநிதியாக யோகிஜீயை அனுப்பி நிலமையை சீர் செய்ய வேண்டும். 200 ரூபாய் ஊபிஸ் பொங்கி எழுங்கள்


shyamnats
செப் 16, 2025 08:22

அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா இந்தியா போன்ற பல நாடுகளில் வெள்ளைக்காரர்கள் அனைவருமே வெளிநாட்டு கொள்ளை காரர்கள் தான். அங்கிருந்த உள்ளூர் மக்கள் பலமிழந்தவர்களாக இருந்ததாலும், வெடிமருந்து, துப்பாக்கிகளால் அவர்கள் அடக்க பட்டார்கள், கொல்லப் பட்டார்கள் இவர்கள் மற்றவர்களை வெளிநாட்டவர் என்று சொல்வது வேடிக்கையானது.


Ramesh Sargam
செப் 16, 2025 08:16

முதலில் நாடு முன்னேற அங்கு குடியேற அனுமதிப்பது பிறகு நாடு நன்றாக முன்னேறியவுடன், முன்னேற்றத்துக்கு உதவிய மற்ற நாட்டவர்களை துரத்துவது. இதையேதான் அமெரிக்காவும் செய்கிறது. நன்றி மறந்த நாடுகள்.


சாமானியன்
செப் 16, 2025 08:01

இங்கிலாந்து பார்லிமென்ட் தடுமாறுகிறது. எது நல்லது என்பதும் புரியல. மஸ்க் சொல்லுவது ஆராயப்பட வேண்டும்.


KOVAIKARAN
செப் 16, 2025 07:03

இங்கிலாந்தின் தற்போதைய பொருளாதாரங்களுக்கான சொத்துக்கள் எல்லாம் இந்தியா போன்ற காலனி நாடுகளிலிருந்து 200 ஆண்டுகளாக கொள்ளை அடித்ததுதானே. அவர்களாக தொடங்க அப்போது என்ன வளம் அவர்களது நாட்டில் இருந்தது? காலனி நாடுகளிலிருந்து கொள்ளை அடித்த பணம், தங்கம், கனிம வளம் இவற்றின் மூலமாகத்தான் இப்போது அந்நாடு முன்னேறிய நாடு என்ற லிஸ்டில் உள்ளது. இங்கிலாந்திலும், அயல்நாட்டுக்காரர்களை வெளியேற்றிவிட்டால், அமெரிக்கா போலத்தான் அங்கும் நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை