உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!

ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்; பிரான்ஸ் அதிபர் மீது கடும் சாடல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: இஸ்ரேல்-ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பினார்.கனடாவில் நடந்து வரும் ஜி 7 மாநாட்டில், உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் குறித்து விவாதம் நடந்தது. அப்போது, உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வை எட்டுவதில் ஜி7 தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xo9ewkvv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ஜி 7 மாநாட்டில் இருந்து பாதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியேறினார். அவர் வாஷிங்டன் திரும்பினார். இது குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தன்னை விளம்பரப்படுத்த முயற்சிக்கிறார். நான் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து பாதியில் வெளியேறியது குறித்து தவறாக கூறினார். இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நாடு திரும்பியதாக கூறுகிறார். காரணம் அவருக்குத் தெரியாது. ஆனால் நான் பாதியில் திரும்பி வந்தததுக்கும், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை விட மிகப் பெரியது. இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Haja Kuthubdeen
ஜூன் 17, 2025 17:37

போருக்கு பிள்ளையார் சுழி போடுவது..போர் மூண்டதும் ஆயுத விற்பனையில் காசு பார்ப்பது...காலம் காலமா இதைத்தானே இவனுங்க செய்றானுவ..போட்டியா எவனும் வரக்கூடாதுன்னுதானே வட கொரியா ரஸ்யா சீனா ஈரான் அனு ஆயுதம் தயாரிப்பது ஆபத்துன்னு புலம்பல்.உண்மைய சொன்னா மூர்க்கன் ரோஹங்கியாம்பானுவ..


அப்பாவி
ஜூன் 17, 2025 16:39

இருந்து சாப்புட்டு வாங்க.


M.Malini
ஜூன் 17, 2025 15:26

மோடிஜி மீது டிரம்முக்கு பொறாமை வந்து விட்டது.


உண்மை கசக்கும்
ஜூன் 17, 2025 14:36

இந்த வெளிநடப்பு மூலம் மீண்டும் மீண்டும் இந்த உலகம் மிக பெரிய ஆபத்தை சந்திக்க போகிறது.


பெரிய குத்தூசி
ஜூன் 17, 2025 14:10

இங்கு நமது பிரதமர் மோடி அவர்களுக்கு அபாயகரமான சவால் இருப்பதாக நான் கருதுகிறேன். வெள்ளைக்காரர்கள் முன்னாடி சிரிச்சிகிட்டே பீர் குடிப்பான் பின்னாடி என்ன செய்வார்கள் என நன்கு அறிந்தவன். அமெரிக்கன், பிரிட்டிஷ் காரர்கள் கருநாக பாம்பை போன்றவர்கள். டிரம்ப் வெளியேறியதற்கும் பிரதமர் மோடிக்கும் சம்பந்தம் இருக்கிறது. காத்திருந்து பார்ப்போம்.


Iyer
ஜூன் 17, 2025 15:55

பேராசையாலும், சுயநலத்தாலும் - இரக்கமின்றி உலகையே நாசமாகியவர்கள் வெள்ளைத்தோல் மேற்கு ஐரோப்பியர்கள் தான். அமெரிக்காவில் உள்ள 10 கோடி செவ்விந்தியர்களை ஈவுஇரக்கமின்றி கொன்று அவர்களின் சொத்தையும், உடமைகளையும், நாட்டையும் அபகரித்தவர்கள் - பிரிட்டன், ஸ்பெயின், மற்றும் பல வெள்ளைத்தோலர்கள்தான்


Murthy
ஜூன் 17, 2025 13:55

எனக்கு மட்டும் வடை தரவில்லை ....ஆறிப்போன டீ கொடுத்தார்கள் . ...அதானால் வெளியேறினேன் ... சரியான கோமாளி அதிபர் . ....


sridhar
ஜூன் 17, 2025 13:45

டிரம்ப் சீக்கிரம் சேர வேண்டிய இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லை


Ramesh Sargam
ஜூன் 17, 2025 13:02

டிரம்ப் ஒரு வயது முதிவு இல்லாத மனிதர்போல நடங்குகொள்கிறார். ஒன்று பாதியில் மாநாட்டிலிருந்து சென்றத்துக்கான காரணத்தை கூறவேண்டும். அல்லது பிரான்ஸ் அதிபர் கூறியது சரி என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இப்படி எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொண்டு பாதியில் சென்றால், மற்ற தலைவர்கள் என்ன நினைக்கக்கூடும். அவர் நாட்டு மக்களே அவரைப்பற்றி என்ன நினைப்பார்கள்?


Nagarajan D
ஜூன் 17, 2025 12:28

என்றுமே எந்த நாட்டிலும் அமைதி நிலைப்பதை ஆயுதங்கள் விற்கும் நாடுகள் விரும்பாது... குறிப்பாக அமெரிக்கா எந்த நாட்டிலும் அமைதி இருப்பதை விரும்பாத ஒரு ரோகி நாடு... தன்னை பெரியண்ணனானாக காட்டிக்கொள்ள ஏதாவது இரண்டு நாட்டிற்கு கழகம் செய்வதையே ஒரு முழுநேர கொள்கையாக வைத்து பிழைப்பை நடத்தும் நாடு


Haja Kuthubdeen
ஜூன் 17, 2025 17:40

சரியா சொன்னீங்க.. இங்குள்ள அரைவேக்காடுகள் மூர்க்கன்சை ரோஹங்கியான்னு புலம்பிட்டு சுத்துதுங்க..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை