உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 6,650 கி.மீ., நைல் நதியில் அணை கட்டிய எத்தியோப்பியா: 6,000 மெ.வா., மின்சாரம் கிடைக்கும்

6,650 கி.மீ., நைல் நதியில் அணை கட்டிய எத்தியோப்பியா: 6,000 மெ.வா., மின்சாரம் கிடைக்கும்

அடிஸ் அபாபா: உலகின் மிக நீண்ட நைல் நதியின் குறுக்கே எகிப்து மற்றும் சூடானின் எதிர்ப்பை மீறி, 15 ஆண்டுகளாக கட்டி வந்த அணை திட்டத்தை எத்தியோப்பியா நிறைவு செய்துள்ளது.ஆப்ரிக்காவில் உற்பத்தியாகும் நைல் நதிக்கு இரண்டு கிளைகள் உள்ளன. வெள்ளை நைல் நதி மத்திய ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் உற்பத்தி ஆகிறது. நீல நைல் நதி கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் உற்பத்தி ஆகிறது. இவை இரண்டும் சூடானின் கர்த்தோம் பகுதியில் இணைந்து வடக்கே எகிப்து வழியாக கடலில் கலக்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h99qgh91&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நதியின் மொத்த நீளம் 6,650 கி.மீ., இந்த நதியின் குறுக்கே எத்தியோப்பியா அரசு, மறுமலர்ச்சி அணை என்ற பெயரில் மின் உற்பத்திக்கான அணை திட்டத்தை, 2011ல் துவக்கியது.இதற்கு, எகிப்து மற்றும் சூடான் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த அணையின் நீராதாரத்தை நம்பியே எகிப்தின் 10 கோடி மக்களும், விவசாயிகளும் உள்ளனர். எத்தியோப்பியாவின் அணை திட்டம் நீர் பங்கீடை பாதிக்கும் என, எகிப்து மற்றும் சூடான் குற்றம்சாட்டின.https://x.com/dinamalarweb/status/1941324883767722277இது தொடர்பாக நடந்த பேச்சுகள் அனைத்தும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தன. ஒரு கட்டத்தில், இந்த நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பின் இந்த அணை திட்டம் முழுமை அடைந்துள்ளது. வரும் செப்டம்பரில் இந்த அணை முறைப்படி திறந்து வைக்கப்படும் என, எத்தியோப்பிய பிரதமர் அபை அஹமது அலி, அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று அறிவித்தார். மேலும், எகிப்து மற்றும் சூடானுக்கு உரிய நீர் பங்கீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.சூடான் எல்லையை ஒட்டியுள்ள இந்த அணை, ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாக அமைந்துள்ளது. இதன் வாயிலாக, 6,000 மெகாவாட் மின்சாரத்தை எத்தியோப்பியா தயாரிக்க முடியும். இது அந்த நாட்டின் தற்போதைய மொத்த மின்சார உற்பத்தியைவிட, இரண்டு மடங்காகும். மேலும், இந்த திட்டம் அமலுக்கு வரும்போது, எத்தியோப்பியாவால் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய முடியும். இந்த அணை, 5,400 அடி நீளமும், 525 அடி உயரமும் கொண்டது. மேலும், 7,400 கோடி கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

VEERAMANI VINO
ஜூலை 07, 2025 05:57

சண்டை போடாமல் இருங்கள் எல்லோர்க்கும் நல்லது, வாழ்க வளர்க பூமியில் உள்ள அனைத்து நாடும், நாட்டு மக்களும்.


G Rathinaraj
ஜூலை 07, 2025 04:52

கிரேட் ஒர்க்


S Annadurai
ஜூலை 06, 2025 08:07

தமிழன்


Pmnr Pmnr
ஜூலை 05, 2025 15:21

சென்னையில் ஏன் இது மாதிரி நடப்பது இல்லை.


Mummoorthy Ayyanasamy
ஜூலை 05, 2025 12:41

அருமையான திட்டம். நன்றி.


அப்பாவி
ஜூலை 05, 2025 08:42

சீக்கிரம் அங்கேயும் சண்டை மூளும். போருக்கான நேரமில்லைன்னு சொல்லி...


raja
ஜூலை 05, 2025 08:42

சர்க்காரியா கமிஷன் கூரிய விஞ்ஞான ஊழலில் இருந்து கருணாநிதி தப்பிக்க தமிழனின் சொந்த நிலமான இந்த தீவு தாரை வார்க்க பட்டது ... முல்லை பெரியாரின் உரிமை விட்டு கொடுக்க பட்டது ... காவிரியில் கர்நாடகா அணைகட்டி கொண்டது என்று தமிழர்களுக்கு செய்த துரோகம் ஏராளம்...இப்போது கூட கர்னாடகம் மேகே தாட்டில் அணைகட்ட ஆரமித்து விட்டது என்றதற்கு ஒரு எதிர்ப்பு குரல் கூட இல்லை தமிழக முதல்வரிடம் இருந்து...ஏனென்றால் அவர்கள் திராவிடர்கள் ...தமிழர்கள் இல்லை.... இது டாஸ்மாக் தமிழனுக்கு புரிய வில்லை.......