| ADDED : ஆக 13, 2024 11:54 AM
லண்டன்: ஐரோப்பா கண்டத்தில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக கடந்த ஆண்டு 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதில், பெண்கள் அதிகம் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.ஐரோப்பா கண்டத்தில் இதுவரை இல்லாத அளவு வெயில் வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஸ்பெயினில் உள்ள உலக சுகாதாரத்திற்கான பார்சிலோனா அறிவியல் மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வானது ஐரோப்பா கண்டத்தில் உள்ள 35நாடுகளில் 823 பகுதிகளில் பதிவான வெப்ப அளவு, உயிரிழப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது.தற்போது வெளியாகி உள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பருவநிலை பிரச்னை காரணமாக, ஐரோப்பா கண்டத்தில், இதுவரை இல்லாத அளவு வெப்ப அலை வீசுகிறது. வனப்பகுதிகள் பற்றி எரிகின்றன. இதனால், 2023ல் 47,690 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2022 ஐ காட்டிலும் குறைவு. உயிரிழந்தவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். அதிகபட்சமாக கிரீஸ் நாட்டில் உயிரிழப்பு விகிதம் 10 லட்சம் பேருக்கு 393 என்ற அளவில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பல்கேரியா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. ஜூலை மாதம் வீசிய வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவின் தெற்கு பகுதியில் வசித்தவர்களில் 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டர். ஜூலை மத்தி முதல் ஆகஸ்ட் பிற்பகுதி வரை வீசிய வெப்ப அலையில் தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.2022 ல் வெப்ப அலை காரணமாக 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2023 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டதை விட அதிகம் இருக்கும். தினசரி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தரவுகள் சரியாக கிடைக்காத காரணத்தினால் குறைவாக உள்ளது. உண்மையில் 58 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வு நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைஇத்தாலி -12,743ஸ்பெயின் -8,352ஜெர்மனி-6,376 கிரீஸ்- 4,339 ருமேனியா -2,585பிரிட்டன் -1,851 பல்கேரியா -1,670 போர்ச்சுகல்-1,432 போலந்து-616உயிரிழந்தவர்களில் ஆண்களை விட பெண்கள்(55 சதவீதம்) பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் மொத்த எண்ணிக்கையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.