உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா அரசின் வெளியேற்ற முடிவு; மாணவ அமைப்பினர் போராட்டம்

கனடா அரசின் வெளியேற்ற முடிவு; மாணவ அமைப்பினர் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: வேலை மற்றும் உயர்படிப்பு நிமித்தமாக வந்துள்ள வெளிநாட்டவர்களை விரைவில் வெளியேற்ற கனடா அரசு திட்டமிட்டுள்ளதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் அங்கு இந்தியர்கள் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள் கனடாவில், இருப்பதால் உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பேர் கனடாவுக்கு செல்கின்றனர். இதில் இந்தியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் வருவதால் தங்கள் நாட்டினருக்கு பாதிப்பு ஏற்படுவதாக அந்த நாட்டு அரசு கருதுகிறது. இதனால் இதனை கட்டுப்படுத்த புதிய திட்டம் வகுத்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு கனடா முழுவதும் உள்ள வெளிநாட்டு பணியாளர்கள், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பிராம்பட்டனில் உள்ள குயின்தெரு, ஒன்டாரியோ, பிரின்ஸ் எட்வர்டு ஐஸ்லாண்ட், மனிடோபா உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். நாடுகடத்தலை நிறுத்து, 'வேலை செய்யவிடு, தங்கவிடு, புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குவதை நிறுத்து, இனவெறியை நிறுத்து' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மாணவர்கள் போராடினர்.

அகதிகள் ஆகும் நிலை

கனடா அரசின் முடிவால் 1.5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என மாணவ அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பலர் அகதிகள் ஆகும் நிலை உருவாகி இருப்பதாகவும், பலர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் இந்தியர்கள் பலர் கனடா அரசின் முடிவால் இன்னும் பலர் பாதிப்புக்கு உள்ளாவர் என மாணவர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
செப் 09, 2024 21:40

படிச்சிட்டு ஊரு திரும்பிடுங்க. இந்தியாவில்.ரெண்டு கோடி வேலை காத்திருக்கு. இல்லேன்னா இஸ்ரேலுக்கு வேலைக்கு போகலாம்.


Shan
செப் 09, 2024 20:29

கனடாவிலிருந்து பல தொழில்நுட்ப வேலைகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதால் கனடாவிலுள்ள பல என்ஜினீயர்களும் ட்ராப்ட்டிங் வல்லுனர்களும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேறு தொழில்களிலும் கனடியர்களை நீக்கி, வெளிநாட்டு மாணவரை குறைந்த சம்பளத்துக்கு நியமிப்பதால், கனேடிய குடும்பங்கள் பல சம்பளமில்லாமல் திண்டாடுகிறார்கள். இந்நிலையில் கனேடியர்களை காப்பதுவே கனேடிய அரசாங்கத்தின் முதல் கடமை.


Easwar Kamal
செப் 09, 2024 18:16

இன்னும் 2 மாதம் தன அமெரிக்காவிலும் இdhae நிலமை ஏற்படலாம். டிரம்ப் மீண்டும் ஆட்சி அமைத்தல் வெளிநாட்டு மக்கள் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் எல்லாம் தங்கள் நாடுகளுக்கு போக வேண்டிய நிலை ஏற்படலாம். அதனால்தான் கமலா ஹாரிஸ் வர முயற்சிகின்றனர். டிரம்ப் ஆட்சியில் இனி greencard /குடிஉரிமை போன்றவை அவ்வளவு எளிதாக கிடைக்காது. டிரம்ப் ஆட்சிக்கிக்கு வந்தால் மாணவர்கள் பணம் இருந்தால் அமெரிக்கா வரலாம் கடன் வாங்கி வந்தால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவீர்கள். அடுத்த வருடம் நிலைமை தெரிந்து அமெரிக்கா வர முயற்சியுங்கள். இல்லாவிட்டால் மாறியதாயக இந்தியோவா அல்லது சிங்கப்பூர்/malaysia போன்ற நாடுகளுக்கு சென்று படைக்கலம்.


Lion Drsekar
செப் 09, 2024 14:55

இங்கேயே யாரும் வாய திறக்க முடியாத நிலை அந்நிய நாட்டில் பாவம் என்ன செய்யமுடியும், எல்லாவற்றிற்கும் பின்னால் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது, உண்மையைக் கூறினால் நம்மைக் காப்பாற்றுவதற்காக அவைகள் நீக்கப்படுகின்றன , இனி அமைதியாக இருப்பதே சிறந்தது , வந்தே மாதரம்


KavikumarRam
செப் 09, 2024 10:46

மொதல்ல சொந்த நாட்டுல முன்னேறுர பழிய பாருங்க. பிற நாடுகளில் பிச்சை எடுப்பதை நிறுத்துங்கள். அந்த நாட்டுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் செய்கிறார்கள். அதிலும் தற்போதைய பிரதமர் தனது அரசியல் லாபத்துக்காக எந்த கேவலமான எல்லைக்கும் செல்லக்கூடியவர். இதில நீங்கள் போராடுவதற்கு என்ன இருக்கிறது. உங்கள் பேராசையே உங்களின் பெருநஷ்டம்.


Rangarajan Cv
செப் 09, 2024 12:47

Well said


புதிய வீடியோ