உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு; அமெரிக்காவில் படிக்கச் செல்வோர் உஷார்!

மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு; அமெரிக்காவில் படிக்கச் செல்வோர் உஷார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் உயர்கல்வி பயில்வதற்காக செல்லும் இந்திய மாணவர்களின் பகுதிநேர வேலை குறித்த அதிர்ச்சி தகவல் தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உயர்கல்விக்காக செல்லும் மாணவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவது தற்போது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கல்வி பயில்வதற்காக இந்தியாவில் இருந்து சென்ற மாணவர்கள், தங்களின் அன்றாட செலவுகள், தேவைகளுக்காக கேஸ் ஸ்டேஷன், சூப்பர் மார்க்கெட்டுகளில் பகுதிநேர வேலைகள் செய்வது வழக்கம். ஆனால், அமெரிக்காவின் தற்போதைய விதிப்படி, மாணவர்கள் கல்லூரியின் வளாகங்களில் மட்டுமே பணியாற்ற முடியும். வெளியே சென்று பணிபுரிய முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், வேறு வழியில்லாத சூழலில், எப்படியாவது வருமானம் ஈட்ட வேண்டுமே என்பதற்காக, இந்திய மாணவர்கள், குழந்தை பராமரிப்பாளர் பணிகளில் அதிகம் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஒஹியோவில் படிக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், 'நான் 6 வயது குழந்தையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் இந்த வேலையை செய்கிறேன். இதற்காக, எனக்கு ஒரு மணிநேரத்திற்கு 13 டாலர் பெறுகிறேன். உணவையும் அங்கேயே சாப்பிட்டு கொள்வேன்,' எனக் கூறினார். மேலும், இது மிகவும் பாதுகாப்பான வேலையாக இருப்பதாக பல இந்திய மாணவர்கள் கூறுகின்றனர். இதே வேலைக்கு நிறைய பேர் தயாராக இருப்பதால், சம்பளம் குறைவாக கொடுப்பதும் நடக்கிறது.ஓபன் டோர்ஸ் அறிக்கையின் அடிப்படையில், டெக்ஸாஸில் 39 ஆயிரம் பேரும், இலினாய்ஸில் 20,000 பேரும், ஒஹியோவில் 13,500 பேரும், கனெக்டிகட்டில் 7,000 இந்திய மாணவர்களும் உள்ளனர். இவர்களில் 50 சதவீதம் பேர் டெக்ஸாஸ், நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற மாகாணங்களில் தேவைக்கு குறைவான ஊதியத்துடன், குழந்தை பராமரிப்பாளர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.எனவே, பகுதி நேர வேலை கிடைக்கும் என்று நம்பி அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ganapathyraman
நவ 22, 2024 21:20

மிக sari


Mohan
நவ 22, 2024 14:59

வைக்குன்டேஜ்வரன் என்கிற தப்பு வினைப்பெயர் கொண்ட சம்பள விடியல் விசுவாசி அவர்களே செய்தியில் உள்ள விஷயத்திற்கு கருத்து சொல்வதை விட்டு மற்ற கருத்து சொல்பவரை விமரிசித்து, டேமேஜாக பேசும் அறிவாளியே உமது கருத்தை மட்டுமே சொல்லவும். எந்நேரமும் எதற்கும் மோடி அரசை ஆதரிப்பவர்களை மட்டம் தட்டி பேசுவதால் நீங்கள் நினைப்பது போல ஆட்சி மாறிவிடாது. முதலில் உங்களது விடியல் ஆட்கள் நேர்மையுடனும், திறமையுடனும் பணியாற்றுகிறார்களா என கூர்ந்து கவனிக்கவும். அரசியல் நிலைமை புரியும்.


ganapathyraman
நவ 22, 2024 21:21

சரியான bathil


Ramesh Sargam
நவ 22, 2024 11:46

அப்படி வேலை கிடைத்தாலும் இந்தியர்களுக்கு அந்த அளவுக்கு சம்பளம் கொடுப்பதில்லை என்றும் ஒரு செய்தி. இந்தியர்கள், ஓ, நான் அமெரிக்காவில் பணிபுரிகிறேன் என்கிற ஒரு வரட்டு கௌரவத்திற்காக தங்கள் தாய், தந்தையர்களை விட்டுவிட்டு, சொந்தபந்தங்களை விட்டுவிட்டு அங்கே முடங்கி கிடக்கிறார்கள்.


அப்பாவி
நவ 22, 2024 11:10

இங்கேயே ரெண்டு கோடி வேலை குடுக்கறாங்கோ. மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஐ.டி. ஊருக்கு ஒரு என்.ஐ.டி. கிராமத்துக்கு ஒரு எய்ம்ஸ் கட்டப் போறாங்கோ.


Ramaraj P
நவ 22, 2024 10:11

ngo நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தால் ஓரிரு மாதங்களில் கோடிகளில் வருமானம் கிடைக்கும் ??


வைகுண்டேஸ்வரன்
நவ 22, 2024 14:12

2 மாதத்தில் கோடிகளில் வருமானம் எப்படி எதில் வரும்? யோசிக்க மூளையே இல்லையா? எப்படி உயிர் வாழறீங்க? சோத்துக்கு என்ன பண்றீங்க?


முக்கிய வீடியோ