உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

பாக்., சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி கராச்சியில் நடந்த கொண்டாட்டத்தின் போது, வான்வழியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோன்ற தினங்களில் பாகிஸ்தானியர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், கராச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, 8 வயது சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல, கோரங்கி, லையரி, மெஹ்மூதாபாத், அக்தர் காலனி, கேமரி, ஜேக்சன், ஓரங்கி டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இதே போன்ற கொண்டாட்டத்தில் 5 பெண்கள் உள்பட 42 பேர் வான்வழி துப்பாக்கிச்சூட்டுக்கு உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்

வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பகுதியில் ஹசன் கேல் போலீஸ் ஸ்டேஷன் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், போலீஸ்காரர் அபு பக்கர் என்பவர் உயிரிழந்தார். மேலும், ஒரு அதிகாரி படுகாயமடைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S.V.Srinivasan
ஆக 14, 2025 12:51

ட்ரும்பு நேற்றைக்குத்தான் உன் புது நண்பன் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிச்சுட்டாங்கன்னு உன் திருவாயல சான்றிதழ் கொடுத்த. இன்னைக்கு அவனுக புத்திய காட்டிட்டானுக . நாய் வாலை நிமித்த முடியாதுப்பா.


Ramesh Sargam
ஆக 14, 2025 12:41

உன்னுடைய நாட்டில் நாட்டின் சுதந்திர தினத்தன்றுகூட மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடமுடியவில்லை.


Anand
ஆக 14, 2025 12:20

பாகிஸ்தானை மெச்சிக்கொள்ளும் கோமாளி ட்ரம்ப் இதற்கு வாயை திறக்கமாட்டான்.


A.Kennedy
ஆக 14, 2025 09:45

பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது என்று அமெரிக்கா நற்சான்று கொடுத்து ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள்ளாக இப்படி சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு, இவர்கள் திருந்த மாட்டார்கள்.


Sun
ஆக 14, 2025 09:26

எங்கப்பா அந்த டிரம்பரும், முனீரும்.


முக்கிய வீடியோ