தேர்தல்களில் இருந்து ஓய்வு முதல் பெண் சபாநாயகர் அறிவிப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பைப் பெற்ற நான்சி பெலோசி, 85, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கலிபோர்னியா மாகாணம் சான் பிரான்சிஸ்கோ எம்.பி.,யாக 38 ஆண்டுகள் சேவை செய்தவர் நான்சி பெலோசி. ஜனநாயகக் கட்சியினரிடையே மிகவும் செல்வாக்கு பெற்றவரான பெலோசி, 2007ல் அமெரிக்காவின் முதல் பெண் சபாநாயகரானார். வ ரும், 2027 ஜன.,ல் பதவிக்காலம் முடியும் நிலையில், இனி எம்.பி., தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.