வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Right time for to make hue and cry since Our GREAT MODIJI has returned to India with out participating
பீஜிங்; சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில் 25 நாடுகளுக்கும் அதிகமான தலைவர்கள் கலந்து கொண்ட விவரம் வெளியாகி இருக்கிறது. சீனாவில் 2ம் உலக போர் வெற்றி, ஜப்பான் சரண் அடைந்த 80வது ஆண்டு நிறைவையொட்டி பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த அணிவகுப்பு தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்றது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ab3i5fg5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அணி வகுப்பில், சீனாவின் அதிநவீன போர் விமானங்கள், கண்டங்கள் கடந்து பறக்கும் அணு ஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன.இவர்கள் தவிர வேறு எந்தெந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர் என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. 25க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதன் பட்டியல்: ஆர்மினிய பிரதமர் நிகோல் பாஷினியன் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கம்போடியா அரசர் நோரோடோம் சிஹாமோனி கியூபா அதிபர் மிகுவல் டயஸ்கனெல் வியட்நாம் அதிபர் லுவாங் குவோங் இந்தோனேசியா அதிபர் பிரபோவா சுபியாண்டோ ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன் கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் கிர்கிஸ்தான் அதிபர் சதீர் ஜபரோவ் லாவோஸ் அதிபர் தோங்லோன் சிசோலித் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு மங்கோலிய அதிபர் உக்னாகின் குரேல்சுக் மியான்மர் ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் நேபாள அதிபர் கே.பி. சர்மா ஒலி பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் காங்கோ அதிபர் டெனிஸ் சசோ நுகுசோ செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக் ஸ்லோவாக் பிரதமர் ராபர்டோ பிகோ தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டார் பெர்டி முகமடோவ் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோவ் ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் மங்காக்வா
Right time for to make hue and cry since Our GREAT MODIJI has returned to India with out participating