உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மன்னித்து விடுங்கள் ரிஷாப்: கிறிஸ் வோக்ஸ் உருக்கம்

மன்னித்து விடுங்கள் ரிஷாப்: கிறிஸ் வோக்ஸ் உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்டில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து, இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட்டின் வலது கால் பாதத்தில் தாக்கியது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், பேட்டிங் செய்ய களமிறங்கிய ரிஷாப் அரைசதம் அடித்து அவுட்டானார். 5வது டெஸ்டில் விலகினார். இதுபோல ஐந்தாவது டெஸ்டில் பீல்டிங் செய்த போது, இடது தோளில் காயமடைந்தார் வோக்ஸ். அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில், ஒற்றை கையுடன் பேட் செய்ய களமிறங்கினார். ரிஷாப், வோக்சின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை வியப்படையச் செய்தன. இதனிடையே சமூக வலைத்தளத்தில், வோக்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கிய போட்டோவை பதிவு செய்து, 'எல்லாம் சரியாகி விடும். உங்கள் காயம் குணமடைய வாழ்த்துகிறேன். மீண்டும் சர்வதேச அரங்கில் ஒருநாள் சந்திப்போம், 'சல்யூட்' என தெரிவித்து இருந்தார் ரிஷாப். இதுகுறித்து வோக்ஸ் கூறுகையில்,'' உங்கள் அன்புக்கு நன்றி, எனது பந்துவீச்சில் உங்கள் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கு மன்னித்து விடுங்கள். கால் காயம் விரைவில் சரியாகும் என நம்புகிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Tiruchanur
ஆக 08, 2025 12:16

தனக்கு அடிபட்ட பிறகுதான் வோக்ஸுக்கு ஞானோதயம் வந்தது போல


Haja Kuthubdeen
ஆக 08, 2025 17:28

அவர் வேண்டுமென்றே பவுன்ஸோ சார்ட் பிட்ச் பந்தோ போடவில்லை.இவரின் பந்து வீச்சு வேகமே மிதம்தான்.நம் பன்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தது காலை பதம் பார்த்து விட்டது.இரண்டு வீரர்களுமே அடிபட்டது விதி.


theruvasagan
ஆக 08, 2025 10:50

இன்றைய கிரிக்கெட் விளையாட்டே இல்லை. சூதாட்டம். கிரிக்கெட் போதையேறிய ரசிகர்களிடமிருந்து பல்லாயிரம் கோடிகள் கைமாறி சிலரது கைகளில் குவிகின்றன. டாஸ்மாக் போதை சினிமா மோகம் கிரிக்கெட் பைத்தியம் மூன்றும் உடலுக்கும் உள்ளத்துக்கும் நமது பணத்துக்கும் கேடு.


Swaminathan L
ஆக 08, 2025 07:42

எலும்பு முறிவோடு ரிஷபம் பந்த் விளையாட வந்தபோது, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இருவரும் அவரது எலும்பு முறிவு உண்டான பாலத்தைக் குறிவைத்தே யார்க்கர்களாக பல முறை பந்து வீசியதைக் கண்டு இனியும் கிரிக்கெட் ஜெண்டில்மென் கேம் என்று சொல்வது அபத்தம் என்று விளங்கிக் கொண்டேன்.