உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஊழல் வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட தாய்லாந்து மாஜி பிரதமர் நாளை விடுதலை

ஊழல் வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட தாய்லாந்து மாஜி பிரதமர் நாளை விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாங்காங்க்: ஊழல் வழக்கில் தாய்லாந்து மாஜி பிரதமர் தக்சின் ஷினவந்தரா,73வுக்கு தண்டனை காலம் குறைக்கப்பட்டதால், முன்கூட்டியே நாளை விடுதலையாகிறார்.கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்த ஷினவத்ரா தன் ஆட்சி காலத்தில் அரசு திட்டங்களில் பெருமளவு செய்த ஊழல் அம்பலமானதால் தண்டனையிலிருந்து தப்பிக்க நாட்டைவிட்டு தப்பியோடினார். 14 ஆண்டுகள் வெளிநாட்டிலிருந்துவிட்டு கடந்தாண்டு (2023) நாடு திரும்பினார்.எனினும் இவர் மீதான குற்றச்சாட்டில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2023 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை ஓராண்டாக மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் குறைத்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறையில் இருந்த போது நன்னடத்தை காரணமாக பரோல் வழங்கப்பட்டதால், தண்டனை காலம் முடிய 6 மாதங்கள் உள்ள நிலையில் நாளை (பிப்.18) விடுதலையாகிறார் என தற்போதைய பிரதமர் ஸரேத்தா தவிசின் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
பிப் 18, 2024 00:58

இந்தியாவில் அரசியல்வாதிகளை இப்படி 'பொசுக்கென்று' தண்டிக்கவே முடியாது. ஏன் என்றால், அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எங்கள் நாட்டில் சட்டம் இருப்பதே, பொதுமக்களை தண்டிக்கத்தான். அரசியல்வாதிகளையும், பெரும் செல்வந்தர்களும் எங்கள் நாட்டு சட்டம் தண்டிக்கவே முடியாது. தண்டித்தால், அப்புறம் அந்த நீதிபதியின் உயிருக்கு ஆபத்துதான்...


sankaranarayanan
பிப் 17, 2024 20:29

பெயர்களைப்பார்த்தால் இந்தியாவிலிருந்து சென்ற பூர்வ குடிமக்களைபோல இருக்கிறதே அதனால்தான் அவர்களின் செயல்களும் ம் அப்படியே இருக்கின்றன வாழ்க நம் தாய்நாட்டைப்போன்றே தாய்லாண்டும்


Raj
பிப் 17, 2024 19:59

இதுக்கு அரிசி மூட்டை godown லே வைக்கலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை