உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது: மத்திய கிழக்கில் அமைதிக்கான வரலாற்று உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும். வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு முன் இந்த அறிவிப்பை வெளியிடுவேன்.காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இன்றைய அவசர முன்னுரிமை. அமைதி சாத்தியம். உடனடி போர்நிறுத்தம் செய்து, அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்க வேண்டும். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை. பாலஸ்தீன அரசை வலுப்படுத்த வேண்டும். அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். வேறு வழியில்லை. பிரான்ஸ் மக்கள் மத்திய கிழக்கில் அமைதியை விரும்புகிறார்கள். நாம் அமைதியை அடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த முடிவை விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: இது ஆபத்தானது மற்றும் தவறானது. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் இணைந்து அமைதியை நாடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில் பாலஸ்தீனத் தலைவர்கள் பிரான்சின் ஆதரவை வரவேற்றனர். பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஐரோப்பிய நாடு பிரான்ஸ். 140 க்கும் மேற்பட்ட நாடுகள் இப்போது பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Sridhar
ஜூலை 25, 2025 15:19

இவனுக முற்றத்திலேயே கரையான் நல்லாவே ஊறியிருச்சு. அதுவே தெரியாம பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பானாம் போலந்தை பாத்து திருந்துங்கய்யா.


மூர்க்கன்
ஜூலை 25, 2025 14:21

அறம் வெல்லும் சத்யா மேவ ஜெயதே உண்மை என்னும் அக்கினி எதனை பஞ்சு மூட்டைகளையும் பொய் மூட்டைகளையும் அழித்து எரித்து சுடர் விடும். இம்மானுவேல் மாக்ரோனுக்கு நன்றிகள் பல ஒட்டு மொத்த யூரோப்பிய நாடுகளும் விரைவில் அங்கீகரிக்கும்.


Sivagiri
ஜூலை 25, 2025 14:12

அரேபிய நாடுகளை தவிர , மற்ற அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஆக்கிரமிக்கப்பட்ட , மற்றும் மதம் மாற்றப்பட்ட இஸ்லாமிய நாடுகள்தான் . . . ஆயுத கும்பல் மூலம் - மற்றும் , அகதிகள் போர்வையில் உள்ளே நுழைந்து ஆக்கிரமிப்பு மற்றும் விரட்டி அடிப்பு மற்றும் இன அழிப்பு - - - நமக்கு உதாரணம் :- காஷ்மீர் . . . பல நூற்றாண்டுகளாக தாக்கப் பட்டு , தப்பி பிழைத்த ஒரே நாடு இந்தியாதான் . . . ஆங்கிலேயன் இங்கே உள்ளே நுழைந்ததன் ஒரே பிரயோஜனம் - - அதிலும் க்ரிப்டோ ஹிந்துக்களான நேரு பாமிலி குள்ளநரித்தனத்தால் , நிரந்தர எதிரிகளை மேற்கிலும் கிழக்கிலும் ஏற்படுத்தி சென்றான் வெள்ளையன் . . . தற்போது ஐரோப்பா பிரிட்டன் முழுவதும் ஆக்கிரமிப்பு பெருகிக் கொண்டிருக்கிறது . . . அந்த நாடுகள் , சில பத்து ஆண்டுகளாவது தப்பி பிழைக்குமா என்பது சந்தேகமே , பல ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக அறிவிக்கப்படலாம் . . . அமெரிக்காவும் இதே கதிதான் , ஆனால் தற்போது அமெரிக்கன் விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டான் . . .இங்கே மோடியை போல - - அங்கே - ட்ரம்ப் காப்பாற்றுவார் என்று அமெரிக்கன் நம்புகிறான் . . .


மூர்க்கன்
ஜூலை 25, 2025 15:49

யாருகிட்ட இருந்து??


Haja Kuthubdeen
ஜூலை 25, 2025 15:52

யாரும் எந்த நாட்டையும் கைபற்றி இஸ்லாமிய நாடு என்று அறிவித்து விட முடியாது...கிருத்து பிறப்புக்கு முன் ஐரோப்பாவில் எந்த மதம் இருந்தது..அந்த நாடுகள் எல்லாம் கிருத்துவ நாடுகளா எப்படி மாறின!!!!அதேபோல்தான் இஸ்லாமிய மதமும்...


Palanisamy T
ஜூலை 25, 2025 12:45

Can the French Govt. guarantee that the new palestinian state will be a secular state. Only this will ensure at least some lasting peace in the Middle East Region. Otherwise this will be ended up as a political talk to gain some political points.


hasan kuthoos
ஜூலை 25, 2025 12:12

மற்ற GCC அரபு நாடுகல் பாலஸ்தீன் மக்களுக்கு அடைக்கலம் குடுக்க வேண்டியதுதானே என்று சில அறிவாளிகள் கேக்கிறார்கள் , அவ்வாறு செய்தால் முழு பாலஸ்தீனையும் இஸ்ரேல் விழுங்கி விடும் , இப்போ மேற்கு கரை மற்றும் காசா மட்டும் உள்ளது, அதுவும் போய்விடும் ,இஸ்ரேலுக்கு வேலை சுலபமாகி விடும் .


தியாகு
ஜூலை 25, 2025 12:27

அதெல்லாம் இருக்கட்டும் அமைதி மார்க்கத்தில் இருக்கும் படித்தவர்கள் பலரும் அமைதியாய் இருக்கும் அமைதி நாடுகளில் வாழாமல் பிற மதங்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் குடியுரிமை வாங்குகிறார்களே அது ஏன்?


ஆரூர் ரங்
ஜூலை 25, 2025 14:10

பழங்காலத்தில் பாலஸ்தீனத்தில் எப்போதுமே தனியான அரசு இருந்ததில்லை. ஏன் ஒரு நாடாகவே இருந்ததில்லை. ஆனால் 4000 ஆண்டுகளாக இஸ்ரேல் நாடு உள்ளது. அங்கு இப்போதும் 20 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். பாலஸ்தீனம் என்பது போலி நாடு. சராசரி அரபியும் பாலஸ்தீன ஆட்களை நம்புவதில்லை. சமமாக நடத்துவதுமில்லை.


Jack
ஜூலை 25, 2025 11:28

மேக்ரோனின் மனைவியம்மா ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்று ஒரு தகவல்


Haja Kuthubdeen
ஜூலை 25, 2025 11:06

சிறப்பான செயல்


hasan kuthoos
ஜூலை 25, 2025 10:59

இஸ்ரேல் ஒண்ட வந்த பிடாரி, பிடாரியை துரத்திவிட்டு , முழுநாடும் பலஸ்தீன் ஆக்க வேண்டும் , அது சீக்கிரம் நடந்து விடும், மீண்டும் யூதர்கள் நாடஅற்றவர்களாக அலையவேண்டியது தான்


ஆரூர் ரங்
ஜூலை 25, 2025 11:20

பாலஸ்தீனியர்கள் நல்லவர்கள் என்றால் ஏன் எந்த பணக்கார GCC அரபு நாடும் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை? யூதர்களை ஆதரிக்கும் கிறிஸ்தவ வெள்ளை நாடுகளில் தஞ்சமடைகிறார்கள்?.


ராஜாராம்,நத்தம்
ஜூலை 25, 2025 12:52

உனக்குதான் தனிநாடு பிரிச்சு கொடுத்தாச்சுல்ல அப்பறம் ஏன் நீ இங்க இருக்க உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் விட வேண்டியதுதான? ஒழுங்கா வாலை சுருட்டிக் கொண்டு இருக்கணும் புரியுதா?


Mohan
ஜூலை 25, 2025 09:46

மேக்ரோனுக்கு முத்திப்போச்சு ...தன் வாயால் தனக்கும் தன் நாட்டுக்கும் சூனியம் வெச்சிருக்கார் ..ஏற்கெனெவே முக்கால் வாசி ஐரோப்பிய நாடுகளை தனதாக்கி விட்டார்கள் அமைதி மார்க்கம் ...இதுல இவன் வேற ஒத்தூதுறான் ..விளங்குனா மாதிரிதான் ...


N.Purushothaman
ஜூலை 25, 2025 09:32

பாலஸ்தீனத்தில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால் அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும் ...ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பாலஸ்தீனத்தில் பெரியண்ணன் போல நாட்டாமை போல செயல்படாமல் இருப்பார்கள் என்பதை எப்படி உறுதி செய்ய போகிறார்கள்? அது தெரியாத வரை குழப்பம் நீடிக்கும் ..


புதிய வீடியோ