உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜி20 மாநாடு: குழு புகைப்படத்தை தவற விட்ட ஜோ பைடன், ஜஸ்டின் ட்ரூடோ

ஜி20 மாநாடு: குழு புகைப்படத்தை தவற விட்ட ஜோ பைடன், ஜஸ்டின் ட்ரூடோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் நடந்த ஜி20 மாநாட்டில், உலகத் தலைவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் குழு புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் தவற விட்டனர்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பங்கேற்பது இது கடைசி முறையாகும். டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், பருவநிலை மாநாடு மற்றும் உக்ரைன் விவகாரத்தில் ஒரு மித்த கருத்தை எட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஜி20 மாநாடு முடிந்த பிறகு உலக தலைவர்கள் வழக்கமாக குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வுக்காக பலர் ஒன்று சேர்ந்தனர். அங்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் கலந்துரையாடினர். தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதன் பிறகு தான், இந்த நிகழ்வை ஜோ பைடன் தவற விட்டது தெரியவந்தது. இவர், மட்டுமின்றி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் இந்த நிகழ்வை தவற விட்டுள்ளனர்.இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது : தலைவர்கள் வருவதற்கு முன்னரே முன்கூட்டியே புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டது. இதனால், சில தலைவர்கள் புகைப்படத்தில் இடம்பெறவில்லை. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஜோ பைடன் புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, பல தலைவர்கள் புகைப்படம் எடுத்த பிறகு, அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது. இதற்கு அங்கிருந்த சில நடைமுறைச் சிக்கல்களே காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SUBBU,
நவ 19, 2024 20:08

Terrorist supporter Trudeau isolated in G20.


Murthy
நவ 19, 2024 19:00

புகைப்படத்தை தவறவிடாமல் இருப்பது எப்படி என்று மோடியிடம் கற்றுக்கொள்ளுங்கள் . .....


Arunkumar,Ramnad
நவ 19, 2024 20:03

அமெரிக்காவில் நவீன முறையில் பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட ஸ்டுடியோவில் நமது விடியல் முதல்வர் கோட் சூட்டுடன் மிடுக்காக நடித்தது sorry நடந்தது பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது.


rama adhavan
நவ 19, 2024 21:23

மோடி இருக்கிறார் என்று தான் இருவரும் வரவில்லை, ஏன் எனில் இருவரும் போக போகிறவர்கள், செல்வாக்கை இழந்தவர்கள். இரண்டும் அண்டை நாடுகள். உறவு மிக அதிகம். இது புரியாமல் உளற வேண்டாம்.


சமீபத்திய செய்தி