உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் அரசு; பதவியை ராஜினாமா செய்ய யூனுஸ் முடிவு

வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் அரசு; பதவியை ராஜினாமா செய்ய யூனுஸ் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: ராணுவ தளபதியுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இந்த அரசுக்கு ஆரம்பத்தில் வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜாமன் ஆதரவு தெரிவித்து வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zpjn2u8r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில் ராணுவ தளபதியிடம் ஆலோசிக்காமல், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை யூனுஸ் நியமித்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக பொதுத்தேர்தலை அறிவிக்க யூனுசுக்கு ராணுவ தளபதி ஜாமன் அழுத்தம் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக பிற தளபதிகளுடன் ஆலோசிக்க அவசரக் கூட்டத்தை கூட்டினார். பெரும்பாலான ராணுவ தளபதிகள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்தனர். இது பிரதமர் யூனுஸூக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேயர் பதவி தொடர்பாக யூனுஸ் அரசுக்கு எதிராக வங்கதேச தேசியவாத கட்சி டாக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்கள் அமைப்பினரும் இன்று போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அடுத்தடுத்த நெருக்கடிகள் காரணமாக வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாணவர்கள் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் நித் இஸ்லாம் கூறுகையில், 'யூனுஸ் சாரின் ராஜினாமா முடிவு பற்றிய செய்திகளை கேட்டேன். உடனே அவரை சந்தித்து இது பற்றி ஆலோசனை நடத்தினேன். அவரும் ராஜினாமா செய்வது பற்றி யோசித்து வருவதாகக் கூறினார்.இதுபோன்ற சூழலில் பணியாற்றுவது கடினம் என்று நினைக்கிறார். ஒவ்வொருவரும் அவருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

VSMani
மே 25, 2025 17:06

இந்தியாவின் இந்தியாவின் இரும்பு மனுஷி இந்திராகாந்தியின் தயவினால் பாக்கி இடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கிற வங்க தேசத்தினர் அவ்வளவு சீக்கிரம் நன்றி மறந்தவர்களாகிவிடுவார்களா? கலிகாலமாகிப்போச்சு கண்மணி என் கண்மணி.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 23, 2025 23:14

மோடிஜியின் சாணக்கியதனம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது..... அவன் ஆயுதத்தை எடுத்து அவனையே அடித்து கொள்ள வைப்பதும் ஒருவித போர் தந்திரமே....இனி பங்களாதேஷ் தப்புவது கடினமே...!!!


Easwar Kamal
மே 23, 2025 17:10

இவர் பாக்கி மற்றும் சீனாவுக்கு ஆதரவு குரல் கொடுத்தது. இவரையும் உள்ள தூக்கி போடுங்க, இவருக்கு எல்லாம் noble பரிசு


ராமகிருஷ்ணன்
மே 23, 2025 16:07

ஆட்சி கவிழுமா, அல்லது போட்டு தள்ளிடுவானுங்களா, பாகிஸ்தானுக்கு ஓடி விடு.


SUBRAMANIAN P
மே 23, 2025 14:23

இரவோடு இரவாக கிழிந்த ட்ரவுசருடன் யூனுஸ் சீனாவுக்கு ஓட்டம்


JaiRam
மே 23, 2025 13:27

இவன் முகத்தை பார்த்துவிட்டு போனால் போதும் ,,,


Karthik
மே 23, 2025 14:15

உ... ஊஊஊ...


VSMani
மே 25, 2025 18:07

நடக்கவே நடக்காதா ?


Rathna
மே 23, 2025 12:46

மூர்க்கம் தலைவிரித்து ஆடும் காட்டுமிராண்டித்தனம் தான் நிற்கும். உலகம் முழுவதும் அது தான் நடக்கிறது. அதில் அப்பாவி மக்கள், பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். 1 வாரத்திற்கு முன்னால் ஒரு ஹிந்து பெண்ணின் கை விரல்களை மூர்க்க கொடுங்கர்கள் கத்தியால் வெட்டி உள்ளனர்.


S.L.Narasimman
மே 23, 2025 12:33

அமைதியாக இருந்த பங்களாதேசை ஒருவழியாய் காலிபண்ணி விளங்கமால் ஆக்கிய நோபல் பட்டம் பெற்ற இந்தஉதவாக்கரை.


Yaro Oruvan
மே 23, 2025 12:07

தன்னிலை மறந்து ஆடுபவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை..


N Srinivasan
மே 23, 2025 11:20

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன ...............


புதிய வீடியோ