உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மீதமுள்ள பிணை கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்

மீதமுள்ள பிணை கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்

ஜெருசலேம்:இஸ்ரேலின் பிணைக் கைதிகள் விடுவிப்பு மற்றும் 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023ல் இருந்து போர் நடக்கிறது. இந்த போரில் இதுவரை 62,000க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். போரை நிறுத்த பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இதன்படி போர் நிறுத்த ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது. ' ஆயுதத்தை கைவிட்டு, பிணைக் கைதிகளை ஒப்படைத்தால் போரை நிறுத்த தயார்' என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால், 'தனி பாலஸ்தீன நாடு அடையும் வரை போராட்டம் ஓயாது' எ ன, ஹமாஸ் அமை ப்பின ர் கூறினர். இதனால் கிழக்கு காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியது. உயிருக்கு பயந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்கின்றனர். இந்நி லையில், இஸ்ரேலின் பிணைக் கைதிகள் விடுவிப்பு மற்றும் 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை