உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவை இனி ஹமாஸ் ஆட்சி செய்யவே முடியாது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ திட்டவட்டம்

காசாவை இனி ஹமாஸ் ஆட்சி செய்யவே முடியாது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்; ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கட்டாயம் கீழே போட வேண்டும். இனி அவர்களால் காசாவை நிர்வகிக்கவே முடியாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறி உள்ளார்.இஸ்ரேல் சென்றுள்ள அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ரூபியோ கூறியதாவது; ஹமாஸ் தொடர்ந்த அச்சுறுத்தி வந்தால், அவர்களுக்கு எதிராக மீண்டும் போர் தொடங்க இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவைப்படுமா என்பதை இப்போது கூற முடியாது. அதே நேரத்தில் அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்திற்கு பிராந்திய அளவில் ஆதரவு இருக்கிறது. இந்த திட்டம் சிறந்த ஒன்று. டிரம்புக்கு வேறு மாற்றுத்திட்டம் இல்லை.காசாவின் எதிர்கால நிர்வாகத்தை இஸ்ரேலும், அதன் நட்பு நாடுகள் தான் வகுக்க வேண்டும். இதில் ஹமாசை சேர்க்க முடியாது. ராணுவமயமாக்கலை ஹமாஸ் மறுத்தால் அது ஒப்பந்தத்தை மீறுவதாகும். எனவே அது அமல்படுத்தப்பட வேண்டும். இது ஒரு ஒப்பந்தம், அதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இஸ்ரேல் உறுதிமொழிகளை அளித்துள்ளது. காசா மக்கள் ஹமாஸ் இயக்கத்தால் அச்சப்படாமல் இருக்க, அவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற நாங்கள் உதவ விரும்புகிறோம். இவ்வாறு மார்கோ ரூபியோ பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
அக் 25, 2025 06:24

அவர்களுக்கு மாற்றாக இன்னொரு தீவிரவாதக்குழுவை வளர்த்து விடுவது நல்லதல்ல.


ஜெகதீசன், கோவில்பட்டி
அக் 24, 2025 19:35

சபாஷ்.. தீவிரவாத ஹமாஸ் அமைப்பை காஸாவில் செயலிழக்க செய்து பாலஸ்தீன மக்களை நிம்மதியாக வாழ விட வேண்டும்.


RAMESH KUMAR R V
அக் 24, 2025 19:13

உலகத்தில் எந்த நாட்டையும் எந்த தீவிரவாத அமைப்பும் ஆட்சி செய்ய முடியாதென்று சூளுரைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை