உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நெருப்புடன் விளையாடினால் உங்களையே எரித்துவிடும்: வங்கதேச அரசுக்கு ஹசீனா எச்சரிக்கை

நெருப்புடன் விளையாடினால் உங்களையே எரித்துவிடும்: வங்கதேச அரசுக்கு ஹசீனா எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: 'வங்கதேசத்தின் வரலாற்றை அழிக்க முயற்சிக்க வேண்டாம்; தீயுடன் விளையாடினால், அது உங்களையே எரித்துவிடும்' என, வங்க தேச தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசு, ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி கோரிக்கை விடுத்தது. இதில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்க வில்லை.சமீபத்தில், சீனாவுக்கு சென்ற முகமது யூனுஸ், நம் நாட்டை வம்புக்கு இழுக்கும் வகையில், வடகிழக்கு மாகாணங்களை சுட்டிக்காட்டி வர்த்தகத்துக்கான துறைமுக வாய்ப்புகள் எதுவும் இல்லை என சர்ச்சையாக பேசினார். இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில், அவாமி லீக் கட்சியினரிடம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஷேக் ஹசீனா நேற்று உரையாற்றினார். அப்போது, முகமது யூனுஸை, 'சுயநலத்துக்காக கடன் வாங்குபவர்; அதிகார பசி கொண்டவர்; வெளிநாட்டு பணத்தை வைத்து வங்கதேசத்தை அழிப்பவர்' என சரமாரியாக விமர்சித்தார். ஷேக் ஹசீனா பேசியதாவது: வங்கதேச சுதந்திர போராட்ட வீரர்களை நினைவூட்டும் வகையில் மாவட்டம் தோறும் அமைத்த நினைவு வளாகங்களை எரித்து, தரை மட்டமாக்குகின்றனர். சுதந்திர வரலாற்றை முகமது யூனுஸ் அழிக்க முயற்சிக்கிறார். சுதந்திரத்துக்காக அவாமி லீக் செய்த தியாகங்கள் அழிக்கப்படுகின்றன. ஆட்சியாளர்கள், தங்கள் ஆதரவாளர்களுக்கு போலீஸ் சீருடை வழங்கி, அவாமி லீக் கட்சியினரை துன்புறுத்துகின்றனர். அரசியல் கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.சட்டத்தை அமல்படுத்துபவர்களே, பொது இடத்தில் கொல்லப்பட்டால், நாடு எப்படி செயல்படும்? அதிகாரப் பசி கொண்ட, பாசிச பயங்கரவாதியான முகமது யூனுஸ், நாட்டை அழிக்கிறார். நீங்கள் நெருப்புடன் விளையாடினால், அது உங்களையும் சேர்த்து எரித்துவிடும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Iyer
ஏப் 15, 2025 07:57

CLINTON - BIDEN - OBAMA என்ற ஊழல் முக்கோணம் பங்களாதேஷ் ஆட்சியை கவிழ்த்து பங்களாதேஷை - பிச்சைக்கார பாக்கிஸ்தான் நாடுபோல் ஆக்கிவிட்டார்கள். இன்னும் 1 வருடத்தில் மோதி மீண்டும் பங்களாதேஷில் ஷேக் ஹசீனா வை பிரதமராகி - பங்களாதேஷை செழிக்க வைப்பர்


மீனவ நண்பன்
ஏப் 15, 2025 02:20

ராணுவ ஆட்சி அல்லது மத குருக்களின் ஷரியா அல்லது அரபு தேசங்கள் மாதிரி ஷேக் ஆட்சி தான் அமைதி மார்க்க நாடுகளுக்கு சரிப்பட்டு வரும்


புதிய வீடியோ