உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / திருமண சட்டம் இல்லாததற்கு எதிர்ப்பு: பிரஸ் கிளப் முன் இந்து ஜோடி திருமணம்

திருமண சட்டம் இல்லாததற்கு எதிர்ப்பு: பிரஸ் கிளப் முன் இந்து ஜோடி திருமணம்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தினரின் திருமணத்தை பதிவு செய்ய, போதிய சட்ட விதிகள் இல்லாததைக் கண்டித்து, பிரஸ் கிளப் முன், ஒரு இந்து ஜோடி திருமணம் செய்து கொண்டது.பாகிஸ்தானில், இந்து மதத்தினர் சிறுபான்மை இனத்தவர்களாக கருதப்படுகின்றனர். இந்துக்களின் திருமணத்தை பதிவு செய்ய போதிய சட்டங்கள் இல்லை. இதை வலியுறுத்தி, முகேஷ் மற்றும் பத்மா என்ற இந்து மத ஜோடி, அங்குள்ள சிந்து மாகாணத்தின், ஐதராபாத் நகரில், பிரஸ் கிளப் முன் இந்து முறைப்படி, அக்னியை ஏழு முறை வலம் வந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குரு சுக் தேவ் திருமணம் செய்து வைத்தார்.இதுகுறித்து குரு சுக்தேவ் கூறுகையில், 'கடந்த 1947ம் ஆண்டில் இருந்து இந்து மதத்தைச் சேர்ந்த, சிறுபான்மையினரின் திருமணத்தை சட்டப்படி அங்கீகரித்து கணவன், மனைவியாக ஏற்றுக் கொள்வதில்லை. இதனால், குறிப்பாக பெண்களுக்கு வீட்டில், சமுதாயத்தில் பிரச்னைகள் எழுகின்றன. அதுமட்டுமின்றி, மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.இத்திருமணத்திற்கு இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ரமேஷ் மால் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். அவர் கூறுகையில், 'பாகிஸ்தான் உருவானதில் இருந்து, இந்து திருமணங்களுக்காக சட்டங்கள் எதுவும் இல்லை. இந்தியாவில் உள்ள நடைமுறையை அறிந்து, இந்துக்களுக்கான திருமண சட்டத்தை பாகிஸ்தான் அரசு இயற்ற வேண்டும். இந்து திருமணச் சட்டங்கள் இல்லாததால், தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட்கள் பெறுவது போன்றவற்றிலும் பிரச்னை உள்ளது,'' என்றார். புதுமணத் தம்பதி கூறுகையில், ''பாகிஸ்தானில் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது என்பதை உலகிற்கு காட்டவே இப்படி திருமணம் செய்து கொண்டோம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி