உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கொலை; சடலத்தின் மீது நடனமாடிய கொடூரம்

வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கொலை; சடலத்தின் மீது நடனமாடிய கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கான்கிரீட் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த சடலத்தின் மீது கொலையாளிகள் நடனம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவில் ஆட்சி கவிழ்ந்த பிறகு, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி அமைந்துள்ளது. இவரது ஆட்சி காலத்தில் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுவரையில் 25க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் அதிகமான கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் சொல்லுகின்றன. இந்த சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ள இந்தியா, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேசத்தின் தினஜ்பூரில் பாபேஸ் சந்திர ராய் என்ற ஹிந்து மதத் தலைவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (ஜூலை 9) பழைய டாக்கா பகுதியில் உள்ள மிட்போர்ட் மருத்துவமனை முன்பு, வியாபாரி லால் சந்த் சோஹாக்கிடம் பணம் பறித்த கும்பல், அவரை கான்கிரீட் கல்லால் அடித்துக் கொன்றுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைக் கண்டித்து வங்கதேசத்தில் உள்ள பல்வேறு பல்கலைகளின் வளாகங்களில் மாணவர்கள் பேரணிகளை நடத்தினர். மேலும், வங்கதேசத்தில் இடைக்கால அரசின் செயல்பாடுகள் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர். இந்தக் கொலை சம்பவத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 19 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சோஹாக் கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவரை கல்லால் அடித்து கொன்று விட்டு, அந்த கொலை கும்பல் அவரது சடலத்தின் நடனமாடிய கொடூர நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து வங்கதேச ஹிந்து புத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் கூறியதாவது; கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தற்போது வரையில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், மொத்தம் 2,442 மத வன்முறை சம்பவங்களை சந்தித்துள்ளனர், எனக் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Makkalal Khouri
ஆக 05, 2025 22:25

இங்கு ஆர் ஸ்ஸ் பிஜேபி செய்தது அங்கே அவர்கள் செய்கிறார்கள்


c.mohanraj raj
ஜூலை 14, 2025 14:09

எம்மதமும் சம்மதம் இல்லை


Santhakumar Srinivasalu
ஜூலை 14, 2025 13:22

போகிற போக்கைப்பார்த்தால் வங்கதேசத்தை இந்தியவுடன் சேர்த்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்!


தத்வமசி
ஜூலை 14, 2025 09:36

இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு வங்கதேசத்தவருக்காவது இப்படி நடக்கட்டும், உலகம் எப்படி கதறுகிறது, இந்தியாவுக்கு எப்படி நெருக்கடி ஏற்படுகிறது என்பதை கண்கூடாக காணலாம். இந்தியாவில் இருக்கும் மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்ட கட்சிகள் இருந்தும் என்ன பிரயோசனம் ? எல்லாம் புல் அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் இருபத்தெட்டு அரிவாள் என்று ஒரு பழமொழி கூறுவார்கள்.


R. SUKUMAR CHEZHIAN
ஜூலை 14, 2025 07:21

எம்மதமும் சம்மதம் என்று கூறும் மற்றும் CIA வை எதிர்க்கும் மடையர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தில் அமைதி கெட இந்த மதவாத கும்பல்கள் தான் காரணம்.


tiny
ஜூலை 14, 2025 06:38

மர்ம நபர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என, இதை பார்த்த பிறகாவது தெரிந்துகொள்ளுங்கள். இதே நிலை நம் நாட்டிலும் ஏற்படாமல் இருக்க, இந்துக்கள் அணைவரும் விழித்து கொள்ள வேண்டும்.


சுலைமான்
ஜூலை 13, 2025 21:22

தீவிரவாதத்தில் வங்கதேசம் பாகிஸ்தானையே மிஞ்சி விட்டது. யூனூஸ் அரசை தீவிரவாத அரசாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். யூனூஸை தூக்கில் போட வேண்டும்.


எஸ் எஸ்
ஜூலை 13, 2025 20:47

ஒரு நாள் பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்திய மாதிரி மோடி அடிக்க போகிறார். அப்போது அடங்குவான்கள். மோடியும் ஜெய்சங்கரும் தோவலும் கவனமாக கண்காணித்து கொண்டு உள்ளதை அறியாத அறிவாளிகள்


Bhaskar Srinivasan
ஜூலை 13, 2025 20:28

இப்போது புரிகிறது CAA 2019 ஏன் என்று


surya krishna
ஜூலை 13, 2025 20:13

the worst religious in the world


முக்கிய வீடியோ