உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி; கணிப்பில் கலக்கியது தாய்லாந்து நீர் யானை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி; கணிப்பில் கலக்கியது தாய்லாந்து நீர் யானை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாங்காக்: அமெரிக்க தேர்தலில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இருவரில் யார் வெற்றி பெறுவார் என்று தாய்லாந்து நீர்யானை கணித்துள்ள வீடியோ வைரலாகி இருக்கிறது. உலக நாடுகள் உற்று பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.,5) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணி முதல் மறுநாள் காலை 6.30 மணி வரை (அமெரிக்க நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு) ஒவ்வொரு மாகாணங்களாக ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்குள் அனைத்து மாகாணங்களிலும் ஓட்டுப்பதிவு முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zwaogc78&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது பற்றி நாள்தோறும் புதுப்புது யூகங்களும், கணிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் லேட்டஸ்ட்டாக தாய்லாந்து நீர்யானை தந்துள்ள கணிப்பு தான் அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.அதுபற்றிய விவரம் வருமாறு: தாய்லாந்தில் ஜோன்புரி பகுதியில் இருக்கும் கா கேவோவ் என்ற திறந்தவெளி உயிரியல் பூங்காவில் மூ டெங் (Moo Deng) என்று பெயரிடப்பட்ட குட்டி நீர்யானை உள்ளது. அந்த பெண் யானையானது, அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என்று கணித்துள்ளது. கணிப்புக்காக, குட்டி நீர்யானை முன்பாக இரண்டு தர்பூசணி பழங்கள் வைக்கப்பட்டது. ஒரு பழத்தில் தாய் மொழியில் (தாய்லாந்தின் உள்ளுர் மொழி தாய்) டொனால்டு டிரம்ப் பெயரும், மற்றொரு பழத்தில் கமலா ஹாரிஸ் பெயரும் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.அந்த பழங்களில் டிரம்ப் பெயர் எழுதியிருந்த பழத்தை குட்டி நீர் யானை சாப்பிட்டது. அருகில் இருந்த மற்றொரு பெரிய நீர்யானை, கமலா ஹாரிஸ் என்ற பெயர் கொண்ட பழத்தைச் சாப்பிட்டது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கே வெற்றி என்று மூ டெங் கணித்துள்ளதாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறுகின்றனர். குட்டி நீர் யானையின் இந்த கணிப்பு வீடியோ இப்போது உலகம் எங்கும் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Aanandh
நவ 05, 2024 20:28

ஒருவேளை இத்தோடு டிரம்ப் காலி என்று அவர் பெயர் போட்ட பழத்தை விழுங்கி சூசகமாகத் தெரிவிக்கிறதோ? தேர்தல், நம் இந்திய நேரப்படி 5ம் தேதி மாலை 4.30 முதல் 6ம் தேதி காலை 7.30 வரை.


M Ramachandran
நவ 05, 2024 19:54

இப்போ உள்ள அரசு இஸ்ரயேலுக்கு செய்யும் செலவை பார்த்தால், அமெரிக்கா திவால் ஆக கூடிய நிலமை.மக்களிடம் வரிப்போட்டு சாக அடிக்கும் இப்போதைய அரசை மக்கள் நம்ப வில்லை. மாறி மாறி ரிசல்ட் வருகிறது. அப்படி என்றால் ஆளும் அரசுமீது அதிருப்தி நிலவு கிறது


Vayalur Visu
நவ 05, 2024 19:44

தயிர் வடைய வச்சு சமாதில கேட்டிருக்கலாம் . அவரு கரெக்ட்டா சொல்லியிருப்பாரு


D.Ambujavalli
நவ 05, 2024 19:33

அமெரிக்க தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்குப்பின் வர வேண்டிய முடிவை ஒரு நீர் யானை தீர்மானிக்கிறதா ? மூட நம்பிக்கைக்கும் ஒரு அளவு வேண்டாமா ?


saiprakash
நவ 05, 2024 16:43

சங்கிகளுக்கு ட்ரம்ப் தான வரணும்


அருணாசலம்
நவ 05, 2024 17:29

உனக்கு எப்படி? சுடலையை அமெரிக்க அதிபரா ஆக்கிடலாமா?


Krish
நவ 05, 2024 17:39

உனக்கு எப்புடி மாங்கி.....


rama adhavan
நவ 05, 2024 18:41

கண்டிப்பாக. இங்கு அமெரிக்காவிலும் இதே நிலை. ஹாரிஸ் கட்சி நம் ஊர் காங்கிரஸ் கட்சி போல். மக்களுக்கு அல்வா தான் கொடுக்கும். வளர்ச்சி தராது.


Sathyanarayanan Sathyasekaren
நவ 05, 2024 19:09

சைப்ரகாஷ் போன்ற சொரணை இல்லாத இந்துக்களை என்ன சொல்வது. மூளை சலவை செய்யப்பட்ட கொத்தடிமை.


DR Sanaathan Rakshak Sanga Nadar
நவ 05, 2024 15:32

அமெரிக்கா வில் ஒரு பெண் இதுவரை அதிபர் ஆன சரித்திரம் இல்லை. போன தடவை ஹிலாரி கிளிண்டன் தான் அதிபர் என்றார்கள் . ஆனால் கடைசியில் அவர் ஜெயிக்கவில்லை. அதுபோல் தான் இந்த தடவையும். டிரம்ப் தான் அதிபர். அமெரிக்கா ஒரு ஆண் ஆதிக்கம் நிறைந்த நாடு.


Bye Pass
நவ 05, 2024 14:41

அமெரிக்காவுக்கு..ஆணா ..பெண்ணா ,,நாளைக்கு தெரியும்


ram
நவ 05, 2024 14:31

இந்த பெண் கட்சி ஆட்சியை பிடித்தால், இப்போது ஐரொப்பா நடக்கும் கூத்து அமெரிக்காவிலும் நடக்கும்.


S S
நவ 05, 2024 13:30

ஒவ்வொரு நாட்டிலும் பிற்போக்குத்தனம் மற்றும் மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன.


SUBRAMANIAN P
நவ 05, 2024 13:28

அமெரிக்கா மக்கள் எப்பவுமே அமெரிக்கா பெரியண்ணாவாக இருக்கனும், எங்க அடிச்சாலும் முதல் அடி அமெரிக்காவுடையதாக இருக்கணும், எல்லா நாடுகளும் தங்களுக்கு கீழேதான் அப்படிங்கற மனநிலையில் இருப்பார்கள். அதுக்கு ஜோ பைடன் சரியா இல்ல. அதேபோலத்தான் கமலா ஹாரிஸும். ஆனா டிரம்பு அதுக்கு சரியான ஆளு. அதனால அவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அந்தாளு வந்து 3ம் உலகப்போரை தொடங்கி வைப்பார்.


முக்கிய வீடியோ