உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிணைக்கைதிகள் விடுதலை முதல் காசா ஒப்பந்தம் வரை: 10 முக்கிய அம்சங்கள்

பிணைக்கைதிகள் விடுதலை முதல் காசா ஒப்பந்தம் வரை: 10 முக்கிய அம்சங்கள்

கெய்ரோ: இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம், அமெரிக்கா முன்மொழிந்த ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் மற்றும் காசா உச்சி மாநாட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.அமைதி ஒப்பந்தம் மற்றும் மாநாட்டின் 10 முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.* ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இதை மத்திய கிழக்கு நாடுகளின் விடியல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைத்தார்.* காசாவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 20 பிணைக்கைதிகள் உயிருடன் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 ஆண்டுகால அவர்களின் துயரம் முடிவுக்கு வந்துள்ளதோடு, பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய 4 பெட்டிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்துள்ளது.* 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களுக்கு பின்னர், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 250 பாலஸ்தீனிய கைதிகளையும், எவ்வித குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு இருந்த காசாவைச் சேர்ந்த 1700க்கும் அதிகமான கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.* விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்தித்த தருணங்கள், வீடியோ காட்சிகள் உலக நாடுகள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காசா மற்றும் மேற்கு கரையில் பஸ் மூலம் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிய பாலஸ்தீன கைதிகளை அங்குள்ளோர் ஆரத்தழுவி வரவேற்றனர்.* அமைதி ஒப்பந்தத்தை நினைத்து பார்க்க முடியாத ஒன்று என அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளார். இதை சாத்தியமாக்க உதவிய எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.* கெய்ரோவில் நடைபெற்ற ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில், டிரம்புடன், எகிப்து, துருக்கியைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் பங்கேற்றனர். இதில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.* இஸ்ரேல் பார்லி.யில் உரை நிகழ்த்த எகிப்து வந்த டிரம்ப், பிராந்திய நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஒரு திருப்புமுனை என்றும், பிணைக்கைதிகள் நாடு திரும்பியதையும் வெகுவாக பாராட்டினார்.* 100க்கான லாரிகள் மூலம் நிறைய உணவு பொருட்கள், அத்தியாவசியமான மருந்துகள் உள்ளிட்டவற்றை காசாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அமைதி ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெரும்பாலான நாடுகள் அவற்றை அளித்ததாக டிரம்ப் கூறினார். * எகிப்தில் அந்நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஜெர்மனி அதிபர் மெர்ஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோரும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் பங்கேற்றது, சர்வதேச அளவில் நாடுகளின் ஆதரவை வெளிக்காட்டியது.* போரின் போது காசாவில் மட்டும் 67,000 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வடக்கு காசாவின் பெரும்பான்மையான பகுதிகளில் பஞ்சம் நிலவுவதால், அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் இனி வேகம் பெறும் சூழல் உருவாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KOVAIKARAN
அக் 14, 2025 07:36

இதைப்போலவே, ரஷ்யா-உக்ரைன் போரும் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவோம். உலகிலேயே ஒரே ஒரு மறைமுக போரான இந்தியா-பாகிஸ்தான் யுத்தம், பாகிஸ்தானின் ISI மற்றும் மறைமுக ராணுவ ஆட்சி அழிந்தால் மட்டுமே முடிந்து உலகிலேயே அமைதி நிலவும். அப்போது POK என அழைக்கப்படும் காஷ்மீரின் பாகிஸ்தான் ஆகிரமிப்பு பகுதி நம்நாட்டுடன் இணைக்கப்பட்டு, அகண்ட பாரதம் உருவாகவேண்டும். இது மோடி அவர்களின் ஆட்சியில் விரைவில் நடந்தே தீரும் என்பது உறுதி.


RK
அக் 14, 2025 07:30

தீவிரவாதம் அழிவை தரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை