உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்? ஐ.டி., நிறுவனங்களுக்கு அதிபர் நேரடி அழுத்தம்

அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்? ஐ.டி., நிறுவனங்களுக்கு அதிபர் நேரடி அழுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மாளிகையில் அந்நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு இரவு விருந்து வைத்த அதிபர் டிரம்ப், 'அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்கள்' என, அவர்களிடம் நேரடியாக கேள்வி எழுப்பியதால் சங்கடமான சூழல் நிலவியது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு நேற்று இரவு விருந்து அளித்தார். இதில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா உடன், 'ஆப்பிள்' நிறுவனத்தின் டிம் குக், 'மெட்டா' நிறுவனத்தின் மார்க் ஸுக்கர்பெர்க், 'ஓபன்ஏஐ' நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன், 'கூகுள்' நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் சத்யா நாதெல்லா ஆகிய தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர். டிரம்பின் முன்னாள் நெருங்கிய நண்பரும், 'எக்ஸ்' சமூக வலைதள தலைவருமான எலான் மஸ்குக்கு அழைப்பு இல்லை.இந்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம், அமெரிக்காவில் முதலீடு செய்யும்படி கடந்த சில மாதங்களாக டிரம்ப் அழுத்தம் தந்து வந்தார். குறிப்பாக, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 'ஐபோன்'களை தயாரிக்க ஆலைகள் அமைத்த நிலையில், அந்நிறுவன அதிகாரி டிம் குக்கை டிரம்ப் கடிந்து கொண்டார். 'இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்பதை நான் விரும்பவில்லை' என்றார்.இந்நிலையில், விருந்துக்கு பின், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், ''நீங்கள் அமெரிக்காவில் பெரிய தொகையை முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பது தெரியும். எவ்வளவு முதலீடு அது,'' என நேரடியாக கேள்வி எழுப்பினார். அதற்கு டிம் குக், ''50 லட்சம் கோடி ரூபாய்,'' என பதிலளித்தார். அதன் பின், தன் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி ஸுக்கர்பெர்க்கிடம், அமெரிக்க முதலீடு குறித்த அதே கேள்வியை கேட்டார். ஸுக்கர்பெர்க்கும், ''50 லட்சம் கோடி ரூபாய்,'' என்றார்.இதே போல் வரிசையாக கேட்க, கூகுளின் சுந்தர் பிச்சை, ''தற்போது 8.38 லட்சம் கோடி ரூபாய்; அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வோம்,'' என்றார். மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா, ''6.28 லட்சம் கோடி ரூபாய்,'' என்றார்.இதை கேட்ட அதிபர் டிரம்ப், ''உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு நிறைய வேலைகள் உருவாகும்,'' என அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
செப் 05, 2025 22:01

( முதலீடு) வரும் ஆனா வராது. சந்தேகமா இருந்தா விடியலிடம் கேட்டுப் பாருங்க.


V K
செப் 05, 2025 21:47

டெய்லி விடிந்தால் போதும் அந்த போர் நான் நிறுத்தினேன் இந்த போரை நான் தான் நிறுத்தினேன் இந்த தாத்தாவின் அக்க போர் தாங்க முடியவில்லை


SP
செப் 05, 2025 21:22

அமெரிக்க வரலாற்றில் இப்படி ஒரு கேடுகெட்ட அதிபரை அந்த மக்கள்இதுவரை சந்தித்திருக்க மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை