அடையாள அரசியலுக்கு சென்றால் அழிவு ஏற்படும் : எச்சரிக்கிறார் சிங்கப்பூர் அமைச்சர்
சிங்கப்பூர்: எதிர்கால தலைவர்கள் அடையாள அரசியலுக்கு அடிபணிந்தால், அது அழிவதற்கான ஒரு வழிப்பாதையாக மாறும் என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான சண்முகம் இன்று கூறினார்.சிங்கப்பூரில் இனம், மதம் குறித்து பார்லிமென்ட்டில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:எதிர்காலத் தலைவர்கள் அடையாள அரசியலுக்கு அடிபணிந்தால், அது 'அழிவதற்கான ஒரு வழிப் பாதையாகும். இங்குள்ள வகுப்புவாத உறவுகள் மோசமடைந்து வருகிறது.சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல இனக் கொள்கைகளை அடைய முயற்சித்து வருகிறோம்.எதிர்கால தலைமுறை அரசியல் தலைவர்கள் அடையாள அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டாலோ அல்லது அழுத்தம் கொடுக்கப்பட்டாலோ அது அழிவதற்கான ஒரு வழிப் பாதையாக அமையும். அது பின்னர் சிங்கப்பூர் வளர்ச்சியை பாதிக்கும்.உலகெங்கிலும் காணப்படுவதை போல அதே மோதல்களையும் பிளவுகளையும் நாம் அனுபவிப்போம். நமது இலட்சியங்கள் இன்னும் முழுமையாக அடையப்படவில்லை.மற்ற நாடுகளை காட்டிலும் இன்னும் நிலைத்தன்மை பெறவில்லை.குறிப்பாக சிறுபான்மையினர், சில சமயங்களில் வெவ்வேறு நிலைகளில் இனவெறியை எதிர்கொள்கிறார்கள், பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்பதை உணர்கிறார்கள், “நாம் ஒவ்வொருவரும் கேட்பதைத் தாண்டி, சிறுபான்மையினர் எப்படி உணர்கிறார்கள் என்பதை கணக்கிடவேண்டும்.இனம், மொழி,மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களும் சம அந்தஸ்தைப் பெற வேண்டும்.இவ்வாறு சண்முகம் பேசினார்.