உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்: ஆஸி பிரதமர் அல்பானீஸ் மகிழ்ச்சி

நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்: ஆஸி பிரதமர் அல்பானீஸ் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

நமது வருடாந்திர தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக எனது நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.பிரதமர் மோடி ஜூலை 6ம் தேதி இந்தோனேசியாவில் தொடங்கி, ஜூலை 11ம் தேதி நியூசிலாந்தில் நிறைவடையும் தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இது தொடர்பாக ஆஸ்திரேலியா பிரதமர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பயணம் மேற்கொள்கிறார். இந்தியா- ஆஸ்திரேலியா இடையே இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நமது வருடாந்திர தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக எனது நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்தி வருவது இரு நாடுகளுக்கும் நன்மைகளை அளித்து வருகிறது. உலகின் நான்காவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற வகையில், இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு ஒரு முக்கிய பொருளாதாரப் பங்காளியாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mahendran Puru
ஜூலை 06, 2026 06:17

நண்பரா, எப்போ இருந்து? எப்படியோ, அதானி நிலக்கரி சுரங்கம் மேட்டர நல்லபடி முடிச்சி கொடுங்க. எங்க ஓய்வறியா உழைப்பாளி அதற்குத்தான் வர்றாரு.


aru
ஜூலை 05, 2026 17:34

கடந்த 12ஆண்டுகளிலில் பல வெளிநாடுகளுடன் நல்லுறவையும் , பொருளாதார, வர்த்தக உறவையும் மேம்படித்தியதில் பிரதமர் மோடிக்கு பெரும் உழைப்பு உள்ளது


சோமாசி
ஜூலை 05, 2026 16:04

சூடா சமுசா போட்டு குடுங்க.


அமாவாசை
ஜூலை 05, 2026 22:28

சோம்பேறி மாசி என்று பெயர் உனக்கு பொருந்தும்


ரவீந்திரன்
ஜூலை 05, 2026 13:11

பனிரெண்டு வருடம் முன்பு வரை இருந்த எந்த பாரதப் பிரதமரும் உலக அளவில் புகழ் பெறவில்லை வாஜ்பாய் தவிர. ஆனால் மோதிஜி பாரதத்தை உயர்த்தியதால் அவர் உலக அளவில் உயர்த்தப் பட்டார்


Seekayyes
ஜூலை 05, 2026 11:48

அல்பனீஸி, அல்பனிஸ் இல்லை.


Barakat Ali
ஜூலை 05, 2026 10:32

மாலா ........


bharathi
ஜூலை 05, 2026 09:58

ரொம்ப நல்லது... பிரதமருக்கு உலகெங்கும் புகழ் பரவி வருகிறது


புதிய வீடியோ