உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - ஆஸி., இடையே பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - ஆஸி., இடையே பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

கேன்பெரா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் இருநாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேன்பெராவில் உள்ள பார்லிமென்ட் வளாகத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு ஆஸ்திரேலியாவின் துணை பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸை சந்தித்து பேசினார். அப்போது, இருவரின் முன்னிலையில் இருதரப்பினரிடையே பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. அப்போது, இருநாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் வேகமான வளர்ச்சியை இருநாட்டு தலைவர்களும் பாராட்டினர்.இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸையும் வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் மற்று ரிச்சர்ட் மார்ல்ஸூடனான ஆக்கப்பூர்வமான சந்திப்பு நிறைவு பெற்றது. சைபர் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் பிராந்திய சவால்கள் உள்ளிட்ட இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம்.இந்திய பாதுகாப்புத் துறையின் வேகமான வளர்ச்சியையும், உலகளவில் இந்திய உயர்தர பாதுகாப்பு தொழில்நுட்பத் திறன் குறித்து நான் எடுத்துரைத்தேன். ஒரு சுதந்திரமான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக, நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம், இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மேலும், கான்பெராவில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுடனான சந்திப்பு சிறப்பானது. இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உறவு தொடர்ந்து ஆழமாகவும், வலுவாகவும் வளரும் என்று நான் நம்புகிறேன், என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். அதேபோல, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் வெளியிட்ட பதிவில், 'ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவு மேலும் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இது, நம்பிக்கை மற்றும் அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது,' இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை