உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை

வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ஆகியவை வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஐ.நா., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.நா., சார்பில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டின் 4ம் காலாண்டில், மற்ற முன்னணி நாடுகளைக் காட்டிலும் இந்தியா, சீனா ஆகியவை வர்த்தகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளன.முன்னேறிய நாடுகள் கூட வர்த்தகத்தில் சிரமத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும், சீனாவும் வளர்ச்சியை அடைந்து வருகின்றன. அதே வேளையில், வரும் காலாண்டுகளில், உலகம் முழுவதும் பொருளாதார பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் நடந்து வரும் மாற்றங்கள், உலகளாவிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் உலகளாவிய வர்த்தக வளர்ச்சியை பாதிக்க கூடும். 2024ம் ஆண்டில் உலகளாவிய வர்த்தகம் கிட்டத்தட்ட 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, 33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sampath Kumar
மார் 16, 2025 16:57

பொருளாதார முன்னேற்றம் நிற்றல் அது சீனா தான் அவனின் வேகத்துக்கு அமெரிக்காவே தடுமாறுகிறது காரணம் அரசியில் ஆட்சி ஓன்று தான் இங்கு உள்ளது போல தடுக்கி விழுந்தால் நாலு கட்சி லிடையதாஹு வலது சாரி கம்யூனிசம் முன்னேற்றத்துக்கு ஏற்றது சனநாயகத்தை விட என்று நிரூபணம் ஆகி உள்ளது இங்கே ?/ சொல்வே வேணாம் அம்புட்டும் கூவத்தை மிஞ்சும் வீச்சம்


raja
மார் 16, 2025 13:15

சே சே தமிழகம் நம்பர் ஒன்னாக வளர்ததால் தான் இந்தியாவே வளர்ந்தது என்று நம்ப நம்பர் ஒன்னு முதல்வர் ஸ்டிக்கர் ஒட்ட வருவாரு பாருங்க...


R. SUKUMAR CHEZHIAN
மார் 16, 2025 12:37

காங்கிரஸ்சை 50 வருடத்திற்கு முன் ஒழித்து கட்டியிருதால், பாஜக 50 வருடத்திற்கு முன் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது இருந்தால் நம்நாடு இன்று உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக வளர்த்து இருக்கும்.


beindian
மார் 16, 2025 11:20

சீனாக்காரனோடு ஒப்பிடும்போது, இந்தியாவை இந்த சங்கீகள் 40 வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டார்கள், இன்னும் இவர்கள் தங்கள் கடவுள்களை மசூதிகளில் சர்ச்சுகளில் திட்டிக்கொண்டு, தேடிக்கொண்டும் இருக்கவேண்டியதுதான்.


Visu
மார் 16, 2025 12:47

முன்னேறிய பாக்கிஸ்தானுக்கு போய்டு ஏன் பொய்யான பெயரில் கஷ்டப்பட்டுட்டுயிருக்க


Ganesh
மார் 17, 2025 09:52

நல்ல வேளை... காங்கிரஸ் இருந்திருந்தால் 80 வருடம் பின்னோக்கி போயிருப்போம்...


புதிய வீடியோ