உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடி: காந்தி ஜெயந்தி விழாவில் பில்கேட்ஸ் புகழாரம்

மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடி: காந்தி ஜெயந்தி விழாவில் பில்கேட்ஸ் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது என அமெரிக்காவில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் தொழிலதிபர் பில்கேட்ஸ் பாராட்டி உள்ளார்.காந்தியின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய கலாசாரம், கலைகள் மற்றும் உணவு வகைகளை காட்சிப்படுத்தும் வகையில், சியாட்டிலில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று (அக் 03) விழா நடந்தது. இந்ந நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் பேசியதாவது: மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் நாம் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறோம். காந்தியின் கொள்கைகள், ஒவ்வொரு நபரின் சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றிக்கு அடித்தளமாக இருக்கின்றன.உலக அளவில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இந்தியாவுடன் இணைய நாங்கள் எதிர்நோக்குகிறோம். இவ்வாறு பில்கேட்ஸ் பேசினார். காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் சியாட்டில் முழுவதும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அசோக்
அக் 04, 2025 10:16

அமெரிக்காவில் நீயெல்லாம் இருந்து பணம் சேத்தியே தவிர்த்து உள்ளூர் மக்களுக்கு ஒண்ணும் பண்ணல. போய் உங்க நாட்டு மக்களுக்கு நல்லது செய்.


Rathna
அக் 03, 2025 18:03

மேற்கத்திய நாடுகளின் தொழில் அதிபர்கள் உள்நோக்கம் நமக்கு தெரியாது. ஆனால் இவர் புகழ்கிறார். நம்ம ஆளு வெளி நாட்டில் போயி நம் நாட்டை கேவலமாக பேசுகிறார்.


Sekar
அக் 03, 2025 13:00

இந்தியா இவர்களின் ஆராய்ச்சிகளுக்கு சோதனை கூடம் என்று இவர் சர்ச்சை கருத்துக்களை முன்னொரு பேட்டிகளில் கூறியுள்ளார்.


SUBBU,MADURAI
அக் 03, 2025 12:03

இந்த பில்கேட்ஸை நம்பக் கூடாது இவர் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. விஞ்ஞான முன்னேற்றம் என்கிற பெயரில் பல ஆபத்தான பொருட்களை உருவாக்கி அதை நம் இந்தியா போன்ற நாடுகளின் விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள். இதற்கு மூல காரணமாக இருப்பவர் மூஞ்சியை அப்புராணியாக வைத்துக் கொண்டு நல்லவர் போல் வேஷமிடும் மைக்ரோசாஃப்டின் ஓனர் பில்கேட்ஸ் என்ற இந்த மனிதர்தான். இவர் பல நாடுகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர் அளவில் விளை நிலங்களை வாங்கி போட்டு சோதனை முறையில் பல செயற்கையான விவசாய பொருட்களை பயிரிட்டு வருகிறார். அதுபோக மக்கள் அன்றாடம் உண்ணும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி,வெண்ணெய், இன்னும் இது போன்று நாம் அன்றாடம் சாப்பிடும் பொருட்களை இயற்கையான முறையில் தயாரிக்காமல் இதற்கென்றே அதிக பொருட்செலவில் உருவாக்கிய மிகப்பெரிய ஆய்வுக் கூடங்களில் இதேபோன்று ஆபத்தான பல பொருட்களை செயற்கை முறையில் தயாரித்து அதை இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையுள்ள நாடுகளில் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதே இந்த பில்கேட்ஸின் நோக்கமாகும். இவர் இதுபோன்று Hybrid farming என்கிற கலப்பின முறையில் பல விவசாய தானியங்களையும் தயாரித்து வருகிறார். ஆனால் இதை சாப்பிடுவதால் நம் மக்களுக்கு இதுவரை வராத பல ஆபத்தான புதிய நோய்கள் கண்டிப்பாக உருவாகும் வாய்ப்பு 100% சதவீதம் இருக்கிறது. இந்த பில்கேட்ஸ் அறமில்லாத ஆபத்தான மனிதர் என்று நான் பலமுறை ஆதாரத்துடன் கூறி வந்துள்ளேன். மேலும் மக்கள் சூப்பர் மார்க்கெட், பெரிய மால்கள் போன்றவற்றில் கண்ணைக் கவரும் வகையில் கலர் கலராக உள்ள இறைச்சிகளையோ, பட்டர், மற்றும் சாக்லேட், ஐஸ்கிரீம் வகைகளையோ தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி இவற்றை வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
அக் 03, 2025 11:55

பில்கேட்ஸ் அவர்களே உங்களின் மதத்தினை உங்கள் நாட்டிலேயே விட்டுவிடுங்கள் , இந்திய பழமையான நாகரீகம் மிகுந்த மனிதர்கள் நிறைந்த நாடு, வெளிநாட்டு மதங்கள் உள்ளே நுழைந்ததும் பலகேடுகெட்ட நிகழ்வுகள், அதில் முக்கியமானது பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மை என்பதனை காலிடுவேல் நிரூபித்தது


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
அக் 03, 2025 11:52

பாஜக ஆட்சியின் வெற்றியை எதிர்க்கட்சியினரும், ஏன் பொதுமக்களுமே கூட புரிந்துகொள்வதில் சிரமப்படுகிறார்கள். ஏறத்தாழ 25 கோடி மக்களின் வாழ்க்கைத்தரம் வறுமைக்கோட்டுக்கு மேலே உயர்ந்துள்ளது என்பதே ஒரு மிகப்பெரிய வளர்ச்சி. ஆனால் இந்த வளர்ச்சியே இந்திய மக்களின் பொறுமையின்மைக்கு காரணம். வளர்ச்சியினால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுகிறது. தங்களின் வாழ்க்கைத்தரத்தை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து தங்களின் வளர்ச்சி இன்னும் மேம்படவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். ஒருவகையில் இது நல்லதே என்றாலும் இந்த பொறுமையின்மையை தங்களுக்கு சாதகமாக்கி அரசின் நடவடிக்கைகள் போதாது என்று கிளர்ச்சி ஏற்படுத்த ஒரு கூட்டம் முயல்கிறது. வளர்ச்சி என்பது ஒரே இரவில் நடப்பதில்லை.கடந்த 10 ஆண்டுகளில் கிடைத்த வெற்றி இன்னும் உத்வேகத்துடன் தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டுமடங்கு வளர்ச்சியை அடைய முடியும். இந்தியர்களுக்கு தற்போது தேவையானது தொடர் முயற்சியும், சற்று பொறுமையும்.


Balasubramanian
அக் 03, 2025 11:09

அதை கொஞ்சம் தெற்கே கொலம்பியா வந்து இருக்கும் ராகுலிடம் எடுத்து சொல்லுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை