உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கிறது: அடித்து சொல்கிறார் ஜெலன்ஸ்கி

இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கிறது: அடித்து சொல்கிறார் ஜெலன்ஸ்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.''கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நான் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா போன்றவை கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், இந்தப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனில் நடந்து வரும் போருக்கு இந்தியா மற்றும் சீனா நிதியளிக்கின்றனர்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2dwpnhhx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி: இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர சீனா விரும்புவதாக நான் நினைக்கவில்லை. அதேநேரத்தில், அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அணுகுமுறையை மாற்ற முடியும் என்று நாங்கள் நினைக்கிறேன்.ஐரோப்பியர்கள் இந்தியர்களுடன் நெருக்கமாக இருந்து வருகின்றனர். ரஷ்ய எரிசக்தித்துறை குறித்த தனது அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ளும் என்பது எனக்கு தெரியும். சீனாவிடம் இருந்து இதே போன்ற நிலைப்பாட்டை எதிர்ப்பார்க்க முடியாது. சீனாவை பொறுத்தவரை இது மிகவும் கடினம். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 24, 2025 22:29

இந்தியா யார் பக்கம் இருக்கிறது என்று இவருக்கும் தெரியும், தெரிந்தும் இந்தியா எங்கள் பக்கம் தான் நிற்கிறது என்று குழந்தை பேசி வருகிறார். இவர் தான் இந்த போர் சூழலுக்கு முதல் காரணம்மே. இவர் ஆமாம் நாங்கள் NATO அமைப்பில் சேர்ந்து ரஷ்யாவை பயமுறுத்தி பார்ப்போம் என்று அடம் பிடித்ததின் விளைவின் முடிவு இப்போது.காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று பேசும் இடத்தில் வந்து நிறுத்தி விட்டது


Venugopal S
செப் 24, 2025 18:02

உங்கள் பக்கம் தான், அவ்வப்போது ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கும் போது மட்டும் அவர்கள் பக்கம், அவ்வளவு தான்!


Shivakumar
செப் 24, 2025 18:30

இல்லை. இந்தியா எப்போதுமே நண்பன் ரஷியா பக்கம்தான். உக்ரைனை நம்பமுடியாது. அவன் திடீரென்று அமெரிக்கா பக்கம் சாய்வான் ...


ராவ்
செப் 24, 2025 17:41

ஆயில் அங்கே வாங்கி உங்களுக்கும் குடுக்கிறோம்ல.


sankaranarayanan
செப் 24, 2025 17:32

பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி: இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கிறது. என்று இவரே கூறும்போது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு என்ன ஆச்சு அவர் ஏனிப்படி இதில் தலையிட்டு குழப்பத்தை உண்டாக்குகிறார் வேறு வேலையை இல்லையா


duruvasar
செப் 24, 2025 16:45

இப்படி பேசிகிட்டு தமிழ்நாட்டு பக்கம் வந்துராதீங்க. உயிருக்கு உத்தரவாதம் இல்லை.


Manikannan
செப் 24, 2025 16:28

India Always with Russia, Karkil war period Ukraine support Pakistan


Vasan
செப் 24, 2025 15:06

இந்தியா, உக்ரைன் பக்கம் இல்லை, உக்ரைன் பக்கத்தின் பக்கம் உள்ளது.


ஜெகதீசன், கோவில்பட்டி
செப் 24, 2025 14:48

என்ன இவரு இவ்வளவு அப்பாவியாக இருக்காரு. ட்ரம்பை கடுப்பேத்த இப்படிப்பட்ட பேசராறா அல்லது இந்தியாவுக்கு ஐஸ் வைக்கிறாரா? நேட்டோ படைகளை எல்லையில் நிறுத்த மாட்டேன் என்று இவர் சொன்னால், அடுத்த நிமிடமே போர் நின்று விட போகிறது.


கண்ணன்,மேலூர்
செப் 24, 2025 14:46

இந்த உக்ரைன் கோமாளி ஜெலன்ஸ்கி அமெரிக்க பபூனுக்கு எந்ந விதத்திலும் சளைத்தவர் அல்ல..


N.Purushothaman
செப் 24, 2025 14:20

ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசிகிட்டு இருக்கீங்க?


சமீபத்திய செய்தி