உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனா, ரஷ்யா அதிபர்களுடன் மோடி சந்திப்பு; பொறாமையில் பொங்குகிறார் டிரம்ப் ஆலோசகர்

சீனா, ரஷ்யா அதிபர்களுடன் மோடி சந்திப்பு; பொறாமையில் பொங்குகிறார் டிரம்ப் ஆலோசகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் சீனா அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசியது, அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் மத்தியில் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருப்பது அவர்களது கருத்துக்களில் இருந்து தெரிய வந்துள்ளது. சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்தித்தார். ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி, அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை எதிரொலியாக இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jnddnhpz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. உலகத்தின் அனைத்து முன்னணி ஊடகங்களும் இந்த மூன்று தலைவர்களும் சந்தித்து பேசியதை இன்று முதல் பக்க செய்தியாக வெளியிட்டுள்ளன. மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டில்லி திரும்பிவிட்ட நிலையில், ரஷ்ய அதிபர் புடின் உடனான சந்திப்பை அமெரிக்கா விமர்சித்துள்ளது. இந்தியா எங்களுடன் தான் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவ்ரோ கூறி உள்ளார்.வாஷிங்டனில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது; இந்தியாவுக்கு ரஷ்யா தேவை அல்ல, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் நாடுகள் தான் தேவை. மாஸ்கோவில் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் பெறுவதை இந்தியா நிறுத்த வேண்டும். உலகின் பெரிய ஜனநாயக தலைவராக, இரு பெரும் சர்வாதிகாரிகளான புடின், ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி உறவை பேணியிருப்பது வெட்கக்கேடானது. அந்த சந்திப்பு தவறு. அவருக்கு நாங்கள் தான் தேவை, ரஷ்யா அல்ல என்பதை உணருவார் என்று நம்புகிறோம். ஜி ஜின்பிங், புடினுடான சந்திப்பில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் (பிரதமர் மோடி) என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு பீட்டர் நவ்ரோ விமர்சித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை