உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கியது அமெரிக்க யூதர்கள் அமைப்பு

ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கியது அமெரிக்க யூதர்கள் அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உக்ரைன் மோதலுக்கு இந்தியா பொறுப்பல்ல. அமெரிக்க அதிகாரிகளின் தவறான விமர்சனம் தொந்தரவை ஏற்படுத்துகிறது என அமெரிக்க யூதர்கள் அமைப்புகடும் கண்டனம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=epfx1rqr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரிகளை அமெரிக்க விதித்தது இருநாடுகளுக்கு இடையே இருந்த வர்த்தக உறவில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க பிரபலங்கள் இந்தியா மீது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில், ''உக்ரைன்-ரஷ்யா போர் அடிப்படையில் மோடியின் போர் தான். ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி போர் இயந்திரத்துக்கு இந்தியா உதவுகிறது. அந்த பணத்தை வைத்து தான் உக்ரைனியர்களை ரஷ்யா கொன்று குவிக்கிறது'' என அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியிருந்தார். இதற்கு அமெரிக்க யூதர்கள் அமைப்பு (American Jewish Committee) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அந்த அமைப்பு கூறியிருப்பதாவது: உக்ரைன் மோதலுக்கு இந்தியா பொறுப்பல்ல, அமெரிக்க அதிகாரிகளின் விமர்சனம் தொந்தரவை ஏற்படுத்துகிறது. அமெரிக்க-இந்தியா உறவுகளை மீட்டமைக்க எடுக்க வேண்டும். அமெரிக்க அதிகாரிகளால் இந்தியா மீதான விமர்சனங்கள் கவலை அடைய செய்கிறது. இந்தியா ரஷ்ய எண்ணெயை நம்பியிருப்பதற்கு நாங்கள் வருந்துகிறோம். ஆனால் புடினின் போர்க்குற்றங்களுக்கு இந்தியா பொறுப்பல்ல. இவ்வாறு அமெரிக்க யூதர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததற்கு அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு கொள்கைக்கான குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நிக்கோல்தாம்சன்
ஆக 30, 2025 21:30

என்னவென்று சொல்ல , உலகில் 64 நாடுகளை ஸ்திரத்தன்மையில்லாமல் செய்துள்ள ஒரே நாடு அமேரிக்கா என்று கூறுகிறார்கள் , அது உண்மையா


Sun
ஆக 30, 2025 17:11

ஆயிரம் கருத்து வேறுபாடுகள், வருத்தங்கள் இஸ்ரேலின் நடவடிக்கைகளில் நமக்கு இருந்தாலும் இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக இந்தியாவுக்காக ஆதரவுக் குரல் கொடுக்க இஸ்ரேலியர்கள் என்றுமே தயங்கியது இல்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 30, 2025 20:30

முழு உண்மை ....... பாராட்டுக்கள் .......


SS Shiv
ஆக 30, 2025 16:37

அமெரிக்காவின் மிக சக்தி வாய்ந்த அமைப்புகளில் இதுவும் ஒன்று....


Anand
ஆக 30, 2025 15:32

உங்களுக்கு தெரியுது வேதனை படுகிறீர்கள், ஆனால் இங்குள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுக்களவாணிகள் தன் சொந்த நாட்டு மக்கள் அவதிப்படுவார்கள் என அதை பற்றி துளிகூட கவலைப்படாமல் இதைவைத்து அரசியல் செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்ததாக எண்ணி எரிகிற தீயில் எண்ணையை ஊற்ற துவங்கியுள்ளது.


vadivelu
செப் 01, 2025 07:49

இந்தியாவிற்கு எதிரான இந்தியாவிலேயே இருக்கும் இந்த கூட்டம் சுமார் 50 கோடியை தாண்டி உள்ளது. ஆனால் அதில் பெரும்பாலும் பதவி இழந்த தலைவர்களும், தங்கள் மதமே சிறந்தது என்று அதன் வளர்ச்சிக்கு இப்போதைய அரசு தடையாக யிருக்கிறது என்ற எண்ணத்தில் உள்ள மதசார்புள்ள மக்களும், பரம்பரை பரமபரையாக துணிந்து கள்ளம் செய்பவர்களும் , அந்நியர்களும் இருக்கிறார்கள்.


Kumar Kumzi
ஆக 30, 2025 15:27

சேசத்துரோகி இத்தாலிய பப்பூ ஓங்கோல் அப்பா போன்ற இந்திய விரோதிகள் டொனால்ட் டிரம்ப்கு முட்டு கொடுப்பார்கள்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 30, 2025 14:10

ரஷ்யா உக்ரைன் யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என்று சொல்வது திராவிட மாடல். மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது.


SP
ஆக 30, 2025 14:04

டிரம்பர் தனது வர்த்தக ஆலோசகரை மாற்றாவிட்டால் உலக நாடுகளிடம் அவமானப்படத்தான் போகிறார்


Rangarajan Cv
ஆக 30, 2025 15:38

Sure to happen


புதிய வீடியோ