உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவுடன் போட்டியிடும் வகையில் ராணுவத்தை நவீனப்படுத்தும் இந்தியா: அமெரிக்கா பாராட்டு

சீனாவுடன் போட்டியிடும் வகையில் ராணுவத்தை நவீனப்படுத்தும் இந்தியா: அமெரிக்கா பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சீனா உடன் போட்டி போடும் வகையில், இந்தியா தனது ராணுவத்தை நவீனப்படுத்தி வருவதாகவும், வெளிநாடுகளை சார்ந்து இருப்பதை குறைத்து வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

விருப்பம்

அமெரிக்க ஆயுதப்படைகளுக்கான பார்லி., குழுவினரிடம், அந்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை இயக்குநர் ஜெனரல் ஜெப்ரி க்ரூசே கூறியதாவது: கடந்த ஆண்டு ஜி20 மாநாட்டை நடத்தி இந்தியா தனது தலைமைப்பண்பை நிரூபித்தது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீன ராணுவத்தை எதிர்கொள்ளவும் விருப்பம் தெரிவித்து உள்ளது.

பேச்சுவார்த்தை

2023ல், சீனா உடன் போட்டி போடும் வகையில் இந்தியா தனது ராணுவத்தை நவீனப்படுத்தவும், ரஷ்ய தயாரிப்புகளை சார்ந்து இருப்பதை குறைக்கவும் நடவடிக்கை எடுத்தது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படை விமானத்தை சோதித்து பார்த்த இந்தியா, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் குறித்து மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

கவனம்

2024 ல் லோக்சபா தேர்தல், பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்தல், சீனாவுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை நவீனப்படுத்துதல், மேக் இன் இந்தியா ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஏப் 16, 2024 19:48

அமேரிக்கா ஒரு நாளும் போர் வேண்டாம், அமைதி வேண்டும் என்று கூறவே கூறாது எங்காவது போர் மூலவேண்டும் அதில் அவர்கள் மூக்கை நுழைக்கவேண்டும் அதுதான் அவர்கள் எண்ணம் அவர்களின் பொழுதுபோக்கும் கூட


mohamed salim Abdullahhussaini
ஏப் 17, 2024 07:43

உண்மை அடுத்தவர் ரத்தம் குடித்து உயிர் வாழும் ஓநாய் இவர் புகழ்ச்சிக்கு யாரும் இங்கு மயங்கிட மாட்டார்கள் இந்த கொம்பு சீவி விடும் காலங்கள் காலாவதியாகிவிட்டன


delhikkaran
ஏப் 16, 2024 15:38

நல்ல செய்தி


A. Kumar
ஏப் 16, 2024 15:02

இந்தியா எப்போதும் முதல் நாடாகவேண்டும் உலகில்


Kasimani Baskaran
ஏப் 16, 2024 14:26

அதி நவீன லேசர் ஆயுதங்களை உருவாக்கி ஏவுகணைகளை அழிக்கும் தொழில் நுணுக்கங்களை உருவாக்க வேண்டும் அது ஒன்றாலேயே ஹைப்பர் சானிக் ஏவுகணைகளை கண்டுபிடித்து அழிக்க முடியும்


Anand
ஏப் 16, 2024 13:50

இவை அனைத்திற்கும் காரணம் மோடி அவர்களின் நாட்டுப்பற்று, ஜெய் ஹிந்த்


sriraju
ஏப் 16, 2024 13:35

நல்ல விஷயம் தான்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ