உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க-கனடா எல்லையில் இந்திய குடும்பம் உயிரிழப்பு; மனித கடத்தல்காரருக்கு 10 ஆண்டு சிறை!

அமெரிக்க-கனடா எல்லையில் இந்திய குடும்பம் உயிரிழப்பு; மனித கடத்தல்காரருக்கு 10 ஆண்டு சிறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க-கனடா எல்லையை கடக்க முயன்ற நான்கு பேர் கொண்ட இந்திய குடும்பம் பனிப்புயலில் சிக்கி இறந்ததை அடுத்து, மனித கடத்தல் கும்பலின் தலைவரான ஹர்ஷ்குமார் படேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.குஜராத்தில் உள்ள டிங்குச்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த, 39 வயதான ஜகதீஷ் படேல். அவரது 30 வயதுடைய மனைவி வைஷாலி பென், அவர்களின் 11 வயது மகள் விஹாங்கி, 3 வயது மகன் தர்மிக் என மொத்தம் நான்கு பேர் கனடா- அமெரிக்கா எல்லையில் உறை பனியில் சிக்கி இறந்தனர். கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி அவர்களது உடலை போலீசார். கண்டுபிடித்தனர். விசாரணையில் கடத்தல் காரரை நம்பி, சட்ட விரோதமாக குடியேற முயற்சி செய்தபோது இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, இந்திய மனித கடத்தல்காரர் ஹர்ஷ்குமார் ராமன்லால் படேலுக்கு, நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. உறைபனியில் சிக்கி உயிரிழந்த தம்பதியினர் பள்ளி ஆசிரியர்கள் என்று உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர்.கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் பனிப்புயலில் இறந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட கடத்தல்காரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சண்முகம்
மே 29, 2025 19:46

அமெரிக்கர்கள் பலர் கனடா குடிமகன்களாக ஆக விரும்பும் இக்காலத்தில், இவர்கள் ஏன் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு கள்ளக்குடியேற்றம்?


Sathyan
மே 29, 2025 08:48

எதற்கெடுத்தாலும் குறுக்கு வழி, அமெரிக்கா தான் கனவு, வாழ்வு என்றால் ஏன் நேர்வழியை பின்பற்ற தவறுகிறார்கள். குழந்தைகளையும் காவு கொடுத்துவிட்டார்கள். இனிமேலாவது கனடா வாழ் இந்திய மக்கள் திருந்துவார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை