உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் காந்தி சிலை சேதம் வெட்கக்கேடான செயல்; இந்திய தூதரகம் கடும் கண்டனம்

லண்டனில் காந்தி சிலை சேதம் வெட்கக்கேடான செயல்; இந்திய தூதரகம் கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்; லண்டனில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் காந்தி சிலை உள்ளது. தியான நிலையில் காந்தி இருப்பதை போன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒரு அடையாளமாகவும் இந்த சிலை போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி இங்கு கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில், இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்த விவரத்தை அறிந்த இந்திய தூதரகம், இந்த செயல் ஒரு வெட்கக்கேடானது என்று கடும் கண்டத்தை பதிவு செய்துள்ளது.இதுகுறித்து இந்திய தூதரகம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது;லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையை நாசப்படுத்திய வெட்கக்கேடான செயலை மிகவும் வருத்தத்துடன் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அஹிம்சை தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு, அஹிம்சை கருத்து மற்றும் காந்தியின் மரபு மீதான வன்முறைத் தாக்குதல்.இதுகுறித்து உடனடி மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. சம்பவ இடத்தில் எங்கள் அதிகாரிகள் ஏற்கனவே சென்றுவிட்டனர். சிலையின் கண்ணியத்தை காக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அந்த பதிவில் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Venugopal S
செப் 30, 2025 22:47

காந்தி சிலை என்றால் செய்தவர்கள் காந்தியை வெறுப்பவர்களாகத் தானே இருக்க முடியும்? அவர்கள் யார் என்று உலகத்துக்கே தெரியும்!


veeramani
செப் 30, 2025 11:54

தமிழ்நாட்டில் சிலைகளை கம்பி வலைகளுக்குள் வைத்துள்ளோம். காபி அடிங்கப்பா


Moorthy
செப் 30, 2025 09:36

சிலையை சேதப்படுத்தினால் கலவரம் தூண்டப்படும் என்றால், அந்த சிலைகளே தேவை அற்றது


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 30, 2025 08:30

அதன் வேலையாகத்தான் இருக்கும் .... ஹிந்துக்கள் மேல பழி வருமே >>>.


sankaranarayanan
செப் 30, 2025 08:26

ஏன் அங்கே சி சி டிவி இல்லையா அவர்களால் கண்டுபிடிக்க முடியாதா என்னடா இந்த நாடு


Moorthy
செப் 30, 2025 08:22

விட்டு தள்ளுங்க


தமிழ்வேள்
செப் 30, 2025 08:07

வருத்தப்பட ஒன்றுமில்லை... வ உ சி, திலகர், சாவர்க்கர் என பலர் கொடுஞ்சிறையில் உழன்றபோது காந்தி & நேருவுக்கு மட்டும் பங்களாக்களில் சகல விதமான வசதிகளோடு சிறை.... அது எப்படி சிறையாகும்? துரோகத்துக்கு கிடைத்த வெகுமதி... லண்டனில் இருக்க வேண்டியவை வ உ சி திலகர் பகத்சிங் சாவர்க்கர் சிலைகள் மட்டுமே... காந்தி நேருவுக்கு இல்லை..


Thravisham
செப் 30, 2025 11:34

ஆனால் அவர்களுக்கு நாடகமாடத் தெரியாதே? காந்தி மட்டும்தான் சுதந்திரம் வாங்கி கொடுத்ததாக பள்ளி பாடங்களில் போதிக்கப்பட்டதே. மற்ற தியாக தலைவர்கள் தெருவில் கோலி பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தார்களா?


என்றும் இந்தியன்
செப் 30, 2025 17:44

இந்த உண்மை காந்தி பூந்தி நேரு சோறு என்று பிதற்றுபவர்கள் இருக்கும் வரை இந்த உண்மை வெளியில் வரவே வராது