உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி; இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி; இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உணவு விடுதி நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன், 51, உணவகத்துக்கு வெளியே நடந்த சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன் என்பவர் உணவு கடை நடத்தி வந்தார். இவரது உணவகத்துக்கு வெளியே, திடீரென இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது சண்டையை மாறியது. அப்போது சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது, ராகேஷ் ஏகபன் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவன் 37 வயதான ஸ்டான்லி யூஜின் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கொலையாளியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த மோதல் உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது என போலீசார் தெரிவித்தனர். இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. சில தினங்களுக்கு முன், டல்லாஸ் நகரில் மர்ம நபரால் ஹைதராபாத்தைச் சேர்ந்த பல் டாக்டர் சந்திரசேகர் போலே, 27, சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவில் தொடர்ந்து இந்தியர்கள் கொல்லப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Senthoora
அக் 06, 2025 10:47

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை கோஷ்டி, குழுக்களுக்கு உள்ளே சண்டை நடந்தால் பொலிஸிக்கு போன் செய்துட்டு ஒதுங்கி நிக்கணும். அங்கே துப்பாக்கி லைசென்ஸ் எடுப்பது சுலபம், யாரிடம் துப்பாக்கி இருக்கு என்று தெரியாது. பாதிக்குமேல் நியூஸிலாந்துபோல பழங்குடியினர் அமெரிக்காவில் இல்லை, வந்தேரி குடிகள்தான் அதிகம், கோஷ்டி சண்டை நடந்தால் சாதாரண போலீஸ் என்ட்ரி ஆகாது, ஸ்பெஷல் காமாண்டோ பிரிவுதான் வரும்.


கனோஜ் ஆங்ரே
அக் 06, 2025 10:44

இறந்தவர்கள் உள்ளூர் ஓணான பிடிச்சிட்டு, கூழோ கச்சியோ குடிச்சிட்டு நிம்மதியா உயிரோட இருந்திருக்கலாம். காசு, பணம், பகட்டு, ஆடம்பரம், காரு, பங்களா இவற்றுக்கு ஆசைப்பட்டதன் விளையே இது...? “எந்நாடு என்றாலும், அது என் நாட்டுக்கு ஈடாகுமா..?” உயிர் முக்கியம் அமைச்சரே...?


முக்கிய வீடியோ