உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை விரிவுபடுத்த சதி செய்யும் இஸ்ரேல்; ஈரான் குற்றச்சாட்டு

போரை விரிவுபடுத்த சதி செய்யும் இஸ்ரேல்; ஈரான் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெஹ்ரான்: ஈரானுக்கு வெளியே போரை விரிவுபடுத்த இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம்சாட்டியுள்ளார்.ஈரானின் ராணுவ தலைமையகம் மற்றும் அணுசக்தி நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், 3வது நாளாக இருநாடுகளுக்கு இடையே போர் நீடித்து வருகிறது.ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் மீது கடந்த 13ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, அணு சக்தி நிலைகளை குறி வைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. 3வது நாளாக நீடிக்கும் இந்தப் போரில் ஈரானின் ராணுவ தலைமையகம் மற்றும் அணுசக்தி நிலைகளை குறித்து இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதுவரையில் ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்தனர். அதேபோல, ஈரானும் இஸ்ரேலின் ஜெருசலம், டெல் அவிவ் நகரில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் தாக்குதலுக்கான சைரன் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மேலும், இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்புகள், போர் விமானங்களுக்கு எரிபொருள் தயாரிப்பு நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, பாதுகாப்பு நடவடிக்கையாக 3வது நாளாக இஸ்ரேல் வான் எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள தென் பார்ஸ் பகுதியில் கத்தாருடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் எரிவாயு சேமிப்பு மையத்தை அமைத்துள்ளது. இதன்மூலம் உள்நாட்டு இயற்கை எரிவாயு தேவையில் 70% பூர்த்தி செய்யப்படுகிறது.இப்படியிருக்கையில் இந்தத் தளத்தின் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, 'இந்த தாக்குதல் மிகப்பெரிய தவறு. அரேபிய வளைகுடாவில் மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானுக்கு வெளியே இந்தப் போரை விரிவுபடுத்த இஸ்ரேல் முயற்சிக்கிறது,' இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
ஜூன் 16, 2025 08:18

சண்டை என்றால் சட்டை கிழியத் தானே செய்யும்.. நீங்கள் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்திய போது.. இனித்தது... அவர்கள் திருப்பி தாக்கும் போது.... கசக்குதா ???


MAFA DUBA
ஜூன் 16, 2025 17:10

எவனுக்கு கசக்கது


Kulandai kannan
ஜூன் 16, 2025 07:40

சீமான் நிலைப்பாடு என்ன?


Sampath
ஜூன் 15, 2025 21:36

இஸ்ரேல் ஆட்டம் இன்னும் ஒரு காசாவை உருவாக்கும். இந்தியாவை குறிவைத்த பாகிஸ்தானுக்கு உதவிய ஈரான் இல்லாமல் போகட்டும்


Narasimhan
ஜூன் 15, 2025 18:44

உங்கள் அல்லக்கைகளான ஹிஸ்பொல்லா, ஹமாஸ், ஹௌதி, ஜோலியை முடித்து விட்டு உங்களிடம் வந்துள்ளனர். உப்பை தின்னவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும்.


MAFA DUBA
ஜூன் 16, 2025 17:11

இஸ்ரவேல் என்ற நாடே இருக்காது


ஆரூர் ரங்
ஜூன் 15, 2025 18:11

எந்த அரபுநாடும் உங்க உதவிக்கு வரவில்லை. அப்புறம் ஏன் சண்டையை விரிவு படுத்த வேண்டும்?. இஸ்லாத்தில் சாதி பிரிவுகள் வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வு கிடையாது, என்பவர்கள் மவுனம்.


Sampath
ஜூன் 15, 2025 23:39

சுடாலின் அறிக்கை விட்டுவிட்டார். தமிழ் ராணுவம் ஈரான் செல்ல தயார் நிலையில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை