உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கத்தாரில் அமெரிக்க தளம் மீது ஈரான் தாக்கு

கத்தாரில் அமெரிக்க தளம் மீது ஈரான் தாக்கு

தோஹா: ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களை, நேற்று முன்தினம் அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இந்த தாக்குதலுக்கு தக்க சமயத்தில் பதிலடி தரப்படும் என ஈரான் அறிவித்திருந்தது. தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் தனது ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருந்தது.மேற்காசியாவின் கத்தாரின் தோஹா அருகே உள்ள அமெரிக்க விமானப் படை தளம் மீது ஈரான் நேற்றிரவு ஆறு ஏவுகணைகளை செலுத்தியது. இதையடுத்து தங்கள் நாட்டின் வான் பரப்பைகத்தார் தற்காலிகமாக மூடியது.கடந்த, 1990களில் வளைகுடா போரின்போது, கத்தாரில் அமெரிக்க விமானப் படை தளம் அமைக்கப்பட்டது. அங்கு, 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !