வாசகர்கள் கருத்துகள் ( 3 )
குர்ஆனில் சோசியல் மீடியா பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே தவிர்க்கவும்.
ஈரான் அச்சத்தில் உள்ளது ...... இந்திய கின்சிர்கள் ஈரான் போயி ஆதரவு கொடுக்கணும் .....
எந்த பயனும் இல்லை
தெஹ்ரான்: லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் பயன்படுத்திய வாக்கி டாக்கியை ஒரே நேரத்தில் இஸ்ரேல் வெடிக்க செய்தது. இதனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு அதிகாரிகள் லேப்டாப், மொபைல் போன்களை பயன்படுத்த ஈரான் தடை விதித்து உள்ளது.பயங்கரவாத அமைப்புகளை துாண்டிவிட்டு, இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்து வந்தது ஈரான். அதிலும் குறிப்பாக, ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயற்சிப்பது, தன்னை குறிவைத்து தான் என்ற எண்ணம் இஸ்ரேலிடம் பரவலாக இருக்கிறது.ஈரான், அணுகுண்டு தயாரித்து விட்டால், அது தங்களுக்கு பேராபத்தாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதலில் நடத்தி வருகிறது.ஈரான் அணுஆயுத நிலைகளை தாக்குவதற்கு சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்காவிடம் இஸ்ரேல் கேட்டுள்ளது. இந்நிலையில் ரகசியங்களை தெரிந்து கொள்ள இஸ்ரேல் டிஜிட்டல் கண்காணிப்பை மேற்கொள்ளலாம் என ஈரான் அஞ்சுகிறது.இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய பாதுகாவலர்கள் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்த ஈரான் தடைவிதித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் பயன்படுத்திய வாக்கி டாக்கியை ஒரே நேரத்தில் இஸ்ரேல் வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு அதிகாரிகள் லேப்டாப், மொபைல் போன்களை பயன்படுத்த ஈரான் தடை விதித்து உள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குர்ஆனில் சோசியல் மீடியா பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே தவிர்க்கவும்.
ஈரான் அச்சத்தில் உள்ளது ...... இந்திய கின்சிர்கள் ஈரான் போயி ஆதரவு கொடுக்கணும் .....
எந்த பயனும் இல்லை