மேலும் செய்திகள்
என்.எல்.சி., சுரங்க பாதுகாப்பு வார நிறைவு விழா
16-Sep-2024
டெஹ்ரான்: ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில், 34 பேர் பலியாகினர். மேற்காசிய நாடான ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து, 540 கி.மீ., தொலைவில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வந்தது. இதில், 70 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த சுரங்கத்தில், மீத்தேன் வாயு கசிவு காரணமாக நேற்று வெடி விபத்து ஏற்பட்டது.தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த கோர விபத்தில், 34 தொழிலாளர்கள் பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சுரங்கத்தில், 2,300 அடிக்கு கீழே சிக்கியுள்ள 18 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், “சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய உதவிகள் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது,” என்றார். எண்ணெய் உற்பத்தி செய்யும் ஈரானில், பல்வேறு கனிமங்கள் நிறைந்துள்ளன. ஆண்டுக்கு 35 லட்சம் டன் நிலக்கரியை பயன்படுத்தும் அந்த நாடு, சுரங்கங்களில் இருந்து 18 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே எடுக்கிறது. மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலக்கரிகள், இங்குள்ள எக்கு ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு, கடந்த 2009ல் நடந்த சுரங்க விபத்துகளில் 20 தொழிலாளர்களும், 2013ல் நடந்த வெவ்வெறு சுரங்க வெடி விபத்துகளில், 11 பேரும்; 2017ல் நடந்த விபத்தில், 42 பேரும் பலியாகினர்.
16-Sep-2024