உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்தத்தை இஸ்ரேல் கடைபிடிக்குமா: ஈரான் சந்தேகம்

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் கடைபிடிக்குமா: ஈரான் சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறலாம் எனக்கூறியுள்ள ஈரான் ஆயுதப்படை தளபதி, அப்படி நடந்தால் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், இதனால், தங்கள் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறிய இஸ்ரேல், அந்நாடு போர் தொடுத்தது. 12 நாட்கள் நீடித்த இந்த போரில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள், குறிவைத்து தாக்கப்பட்டன. மேலும், இந்த தாக்குதலில், ஈரானின் முக்கிய படை தளபதிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து இந்தப் போர் முடிவுக்கு வந்தது.இந்நிலையில், ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி அப்தோல் ரஹீம் மவுசாவி, சவுதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் காலித் பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது அப்தோல் ரஹீம் மவுசாவி கூறியதாவது: போர் நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளிலும் இஸ்ரேல் உறுதியாக இருக்குமா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. அந்நாட்டின் அத்துமீறலுக்கு வலிமையான பதிலடி கொடுக்கப்படும்.இஸ்ரேலுக்கு எதிரான போரை நாங்கள் துவக்கவில்லை. அந்நாட்டின் அத்துமீறலுக்கு அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி பதிலடி கொடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thravisham
ஜூன் 30, 2025 06:08

கிழ முல்லா கமெனி இருக்கிறாரா இல்லையா? அத சொல்லுங்க முதல்ல.


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 29, 2025 20:49

மதவாத நாடான ஈரானுக்கு யுரேனியம் செய்ய உரிமை இருப்பதாக கருதுவது போல, அதை முலையிலேயே கிள்ளி எறிய இஸ்ரேலுக்கு முழு உரிமை உள்ளது, இஸ்ரேலின் செயல் எதிர்கால உலக அமைதிக்கு வழி வகுக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை