உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் 3 பேருக்கு துாக்கு

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் 3 பேருக்கு துாக்கு

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, மேலும் மூன்று பேருக்கு ஈரான் நேற்று துாக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் -மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக பகை இருந்து வருகிறது. இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது கடந்த, 13ல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.இஸ்ரேலின், மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்ததாக, 700க்கும் மேற்பட்டோரை கடந்த சில நாட்களில் ஈரான் கைது செய்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தலையீட்டால் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. போர் முடிந்த பிறகு, நேற்று மூன்று பேரை ஈரான் துாக்கிலிட்டது.மூவருக்கும், ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள உர்மியா சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக, கடந்த பத்து நாட்களில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஆறு பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ALWAR
ஜூன் 26, 2025 09:14

தமிழகத்தில் பாதி பேர் காணாமல் போயிருவாங்க


V RAMASWAMY
ஜூன் 26, 2025 09:00

இம்மாதிரி உடனடி தண்டனை கொடுக்கும் சட்ட திட்டங்கள் நம் நாட்டில் எப்பொழுது அமுலுக்கு வரும்?


VENKATASUBRAMANIAN
ஜூன் 26, 2025 07:55

இதுதான் நாடு. இங்கே வழக்கு என்று 20 வருடம் இழுத்து அடிப்பார்கள். ஈரானை போல் இங்கும் இருந்தால் பயம் வரும். தவறுகள் குறையும்


Senthoora
ஜூன் 26, 2025 06:20

இந்தியாவில் என்றால் பிரியாணி கொடுப்பாங்க.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 26, 2025 06:41

மத சார்பிலா மாவீரன் பட்டம் ...கட்சியில் பதவி ..இன்னும் பிற வசதிகள் கூட கிடைக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை