உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 5 லட்சம் ஆப்கானியர்களை வெளியேற்றியது ஈரான்; உளவு பார்த்ததாக நடவடிக்கை

5 லட்சம் ஆப்கானியர்களை வெளியேற்றியது ஈரான்; உளவு பார்த்ததாக நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரானுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தங்கி, கூலி வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளை பார்த்து வந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள், கடந்த 16 நாட்களில் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.மேற்கு ஆசிய நாடான ஈரானில் சமீபத்தில் போர் நடந்தது. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகக் கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானும் அவர்களுக்கு பதிலடி தந்தது. இறுதியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது.அதன் பின், இலக்குகளை எட்டிவிட்டதாகக் கூறி போரை நிறுத்த இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இதை ஈரானும் ஏற்றது. 12 நாட்கள் நீடித்த போர் ஜூன் 24ல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், போர் நிறுத்தம் துவங்கிய நாளிலிருந்து ஈரானில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள, தன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஈரான் அரசு தீவிரப்படுத்தியது.கடந்த 9ம் தேதி வரை, 5 லட்சத்து 8,426 ஆப்கானியர்கள் அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்தது. சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மக்களின் கட்டாய வெளியேற்றங்களில் இதுவே மிகப் பெரியது என ஐ.நா., குறிப்பிட்டுள்ளது. புலம்பெயர்ந்த ஆப்கானியர்கள், ஈரானின் முக்கிய நகரங்களான டெஹ்ரான், இஸ்பஹான் ஆகிய இடங்களில் கூலி வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர்கள். அதில் சிலர் இஸ்ரேலிடம் பணம் பெற்று, உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.இதனால், புலம்பெயர்ந்த ஆப்கானியர்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி அவர்களை வெளியேற்றத் துவங்கினர். இதனால், குடும்பத்துடன் ஈரானில் வசித்த பெண்கள், குழந்தைகள் தற்போது வீடுகளை இழந்து, ஆப்கானிஸ்தானின் இஸ்லாம் காலா நகர முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிந்தனை
ஜூலை 13, 2025 17:01

உலகம் முழுவதும் முஸ்லிம்களின் முஸ்லிம்களுக்கே பிடிப்பதில்லை ஆனால் முஸ்லிம்களைப் பிடித்த ஒரே கேடுகெட்ட சமுதாயம் என்றால் திராவிட சமுதாயம்தான் அது


Ramesh Sargam
ஜூலை 13, 2025 12:40

இந்தியாவில் உளவுபார்க்கும் பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷிகள், மியான்மாரிகள், சீனர்கள், இலங்கையர்கள் என்று எல்லோரையும் இப்படி இந்தியா வெளியேற்றினால், இந்தியா வெகு சீக்கிரம் சுபிட்சமடையும். வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.


பா மாதவன்
ஜூலை 13, 2025 09:50

இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஒரு நாடு அதே சமுதாயத்தை சேர்ந்த மக்களை தேச துரோக செயல்களில் ஈடுபட்டதால் தன் நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. ஆனால், இங்கு நம் தேசத் துரோக அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளால், பக்கத்து இஸ்லாமிய நாட்டை சேர்ந்த மக்கள் நம் நாட்டில் தேச துரோக செயல்களில் ஈடுபடும்போது , நம் நாடு விரைந்து எல்லோரையும் களை எடுத்து, நம் நாட்டை சுத்தப் படுத்த வேண்டும்.


MARUTHU PANDIAR
ஜூலை 13, 2025 14:46

இங்குள்ள சட்ட விரோதமான அந்நிய துரோகிகளை விட இங்கு பிறந்து வளர்ந்து இந்த மண்ணின் சோற்றை தின்றுகொண்டு, எல்லா சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு 10 தலைமுறைக்கு மேல் துட்டு கொள்ளை அடிச்சு வெச்சு, இன்னும் அந்நியனுக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் "ஜனநாயக"போர்வையில் பிரிவினை செயல்களில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒயிட் காலர் துரோகிகளையும் சேர்த்து நாடு கடத்தினால் தான் நாடு உருப்படும்


Keshavan.J
ஜூலை 13, 2025 09:24

இது போல் ஏன் இந்தியா பங்களாதேஷிகளை நாடு கடத்த கூடாது. 5 லக்ஷம் 16 நாளில். இது பெரிய சாதனை.


ரங்ஸ்
ஜூலை 13, 2025 08:51

பாவம் மக்கள் பிழைப்புக்காக அலைகிறார்கள்


SUBBU,MADURAI
ஜூலை 13, 2025 08:36

What do you think is the problem in our tem? We are not even able to stop Bangladeshis from voting Meanwhile, Iran has deported 500,000 Afghans in just last month 5 lakh deported in 1 month...imagine But India has not been able to deport Rohingya refugees Whether we like it or not, India remains a soft state.


சமீபத்திய செய்தி