உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ஈரான்

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலக ஈரான் முடிவு செய்துள்ளது.இஸ்ரேல், ஈரான் இடையே எழுந்துள்ள போர் தீவிரம் அடைந்துள்ளது, உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. பரஸ்பரம் இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் வான்வழி தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wwdk7b5k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்தி வரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந் நிலையில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்காக மசோதாவை தயாரிக்க ஈரான் பார்லிமெண்ட் தயாராகி வருகிறது.இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார். ஆனாலும் பேரழிவு ஆயுதங்களை டெஹ்ரான் தயாரிப்பதை எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அந்நாட்டு அதிபர் மசூத் பெசேஷ்கியன் கூறுகையில், ஈரானுக்கு அணு ஆயுதங்களை தயாரிக்கும் எண்ணம் இல்லை, ஆனால் அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான உரிமையை தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறினார்.அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் என்பது அணு ஆயுதங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நொழில்நுட்பங்களின் பரவலை தடுப்பது, அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வ முறையில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதில் முழு ஒத்துழைப்பை அளிப்பது போன்றவற்றை நோக்கமாக கொண்டதாகும். இது ஒரு சர்வதேச ஒப்பந்தமும் கூட.1970 முதல் இந்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. கிட்டத்தட்ட 191 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் தெற்கு சூடான், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. 2003ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து வடகொரியா விலகியது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ASIATIC RAMESH
ஜூன் 16, 2025 19:04

இந்த தீவிரவாதிகளை வளர்த்தது யார்? பின்லேடனை வளர்த்தது யார் ? பாகிஸ்தானில் அணு குண்டுகளை ஒளித்து வைப்பது எப்படி? ஈரான் - ஈராக் போரின்போது சதாம் உசேனை கொன்றதற்கான காரணத்தை - கெமிக்கல் ஆயுதங்கள் இருப்பதை நிரூபனம் செய்தார்களா ? அப்போது ஈரானை தூண்டிவிட்டவர்கள் யார் ? முதலில் அணு ஆயுதத்தை தயாரித்தது நியாயமா ? கொரானா கிருமிகளை உலகிற்கு பரப்பி பல உயிர்களை கொல்ல காரணமானவர்கள் யார் ? அவர்கள் மீது ஐநா என்ன நடவடிக்கை எடுத்தது ? இப்போது வங்கதேசத்தை தூண்டிவிடுபவர்கள் யார் ?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 16, 2025 18:28

உலகத்தையே அச்சுறுத்துவது தீவிரவாதிகளே.....அவர்களை சீராட்டி பாராட்டி வளர்ப்பது இஸ்லாமிய நாடுகளே....பழமைவாதிகளான இவர்கள் உலகம் முழுக்க பரப்ப எந்த எல்லைக்கும் செல்வார்கள்.... ஆதலால் இவர்கள் கையில் அணு ஆயுதங்கள் சிக்காமல் இருக்கத்தான் இந்த போராட்டம்.... உலகில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் எந்த நாடும் அதை காட்டி பயமுறுத்த வில்லை..... ஆனால் பாகிஸ்தான் போன்ற தீவிரவாதிகளை வளர்க்கும் நாடுகள் பகிங்கிரமாக மற்ற நாடுகளை எச்சரிக்கின்றன.... எனவே இது போன்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்து கொள்ள உலக நாடுகள் விரும்புவதில்லை....!!!


INDIAN
ஜூன் 16, 2025 18:16

இனத்தை அயிப்பதற்கு அணு ஆயுதத்தை பயன் படுத்த கூடாது அல்லது யாரும் உலகத்தில் அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்ற தீர்மானம் உலக நாடுகள் கொண்டு வரவேண்டும்


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 18:01

அமெரிக்காவின் சித்து விளையாட்டுகளை வட கொரியாவிடம் காட்ட வேண்டியது தானே ? அவர்கள் வெளிப்படையாகவே தினம்தினம் பல அணுஆயுத சோதனைகள் செய்கிறார்களே ? ஏன் அமெரிக்கா அவர்களை தடுக்க முயலவில்லை ? காரணம் அங்கே அமெரிக்காவின் பருப்பு வேகவில்லை. அப்படியே செய்தாலும் அங்கே திருட அந்த நாட்டில் எதுவும் இல்லை. அதே ஈரான் நாட்டை முற்றுகையிட காரணம் அங்கே எண்ணெய் வளம் அதிகம். ஈராக்கை செய்தது போல நினைக்கிறது அமெரிக்கா. ஈரான் துணிந்து தைரியமாக முடிவு எடுக்க வேண்டும். அது அந்த நாட்டின் உரிமை.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 16, 2025 18:58

ஆம்.... ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.....தயாரித்து ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுத்தி இடம் கொடுக்கலாம் ஏனெனில் இவர்களுக்கு ஆயுதம் மற்றும் பணம் கொடுத்து வளர்ப்பதே ஈரான் தான் என்று உலகத்திற்கே தெரியும் அப்படி இருக்க ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கட்டும்.....


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 17:47

அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள், அணு ஆயுதம் இல்லாத நாடுகளை அணு ஆயுதம் உற்பத்தி செய்ய அனுமதிப்பதில்லை அது தான் ஒப்பந்தம். அவர்களை தங்களின் கீழ் அடிமையாக வைத்து, மிரட்டி பயன்படுத்தி கொள்ள தான் நினைக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் மொக்கை காரணம் தீவிரவாதிகள் கையில் சென்று விடும் என்பதே. அல்லது தவறாக பயன்படுத்தினால் பேரழிவு உண்டாகும் என்பதே. இதே நிலை இந்தியாவிற்கும் அன்று உண்டானது. அதை மீறி தான் அப்போது நாம் அணுஆயுதம் தயாரித்தோம். ஒரு நாடு தங்கள் பாதுகாப்பிற்கு, தங்களை தற்காத்து கொள்ள அவர்களே ஆயுதம் உற்பத்தி செய்து கொள்ள உரிமை உண்டு என்றார் அப்போதைய பிரதமர் வாஜிபாய். அதே உரிமை ஈரானுக்கும் உண்டு. மறுக்க கூடாது.


Arjun
ஜூன் 16, 2025 19:40

தீவிரவாதிகளை வளர்க்கும் நாடு அவர்களுக்கு அணு அயுதத்தை கொடுக்காது என்று என்ன? உத்திரவாதம்??? . இந்தியா ஒன்றும் தீவிரவாதிகளை வளர்க்கவில்லையே .


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 20:19

பாகிஸ்தான் அரசு கூட தீவிரவாதிகளை சோறு ஊட்டி வளர்கிறது. அதற்காக தீவிரவாதிகளின் கையில் அணு ஆயுதம் கொடுத்து விட்டார்களா ? ஈரானை அழிக்க இப்படி ஒரு சதி.


புதிய வீடியோ