உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல்: 30 பேர் பலி: பதற்றம் அதிகரிப்பு

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல்: 30 பேர் பலி: பதற்றம் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் டெல் அவிவ் நகரில் 30 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அந்நாட்டு மக்கள், குண்டு துளைக்காத முகாம்களுக்குள் தஞ்சமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=58rvd4gb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை தொடர்ந்து, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். அந்த அமைப்பின் தலைவர் நஸ்ருல்லாவை விமானப்படை மூலம் குண்டு வீசி கொன்றது. அதேநேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது. இருப்பினும் லெபனான் தெற்கு எல்லையில், ராணுவத்தினரை குவித்த இஸ்ரேல், ஹிஸ்புல்லாக்கள் மீது தாக்குதலை துவக்கி உள்ளது.ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதேநேரத்தில் ஈரான் - இஸ்ரேல் இடையேயும் மோதல் போக்கு நிலவுகிறது.இதனிடையே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாகவும், இதற்காக அந்நாடு கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்கா எச்சரித்து இருந்தது.இந்நிலையில் காசா, லெபனான் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. டெல் அவிவ் நகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 30 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தி உள்ளது. மக்களும் குண்டுதுளைக்காத முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

MUTHU
அக் 02, 2024 09:04

இதனை ஈரானில் மக்கள் தெருக்களில் இறங்கி இதில் அதிக அளவில் பெண்களும் உண்டு கொண்டாடுகின்றனர். என்ன வன்மமோ தெரியவில்லை. இஸ்ரேல் தாக்குதலை பாலஸ்தீனியன் கொண்டாடுகிறான். ஏற்றுக்கொள்ளலாம். ஹமாஸ் கொண்டாடட்டும். சரி. ஏன் ஈரானியர்கள் கொண்டாடவேண்டும்?. யாரோ ஒருத்தரை எதிரியாகவே நினைத்து செய்யப்படும் மட்டமான அரசியல்கள். மேலை நாட்டு மக்களிடம் இதை போன்ற மட்டமான எண்ணங்கள் இருந்ததில்லை. இளவயதில் இருந்ததே இவர்களிடம் மாற்று மத வெறுப்பு விதைக்கப்படுகிறது. இவர்களும் கேள்வி கேட்காமல் இதனை நம்புகின்றனர்.


sankaranarayanan
அக் 02, 2024 09:00

அக்டோபர் முப்பத்து ஒன்றாம் தேதிதான் தீபாவளி கொண்டாடுகிறோம் அன்ரோ அல்லது அதற்கு முன்பே ஈரானும் இஸ்ரேலும் தீபாவளியை கொண்டாடி உலகை வீழ்த்தி விடுவார்கள் போலிருக்கிறது மக்களே ஜாக்கிரதை எது வேண்டுமானாலும் நடக்கலாம் எதற்கும் தயாராக இருங்கள்


நிக்கோல்தாம்சன்
அக் 02, 2024 05:54

தீவிரவாதி நாசருல்லா கு பேனர் வைத்த வந்தேறி மக்கள் இனி கொமேனிக்கும் வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லையோ ?


ராமகிருஷ்ணன்
அக் 02, 2024 05:51

தீபாவளி பட்டாசுகள் போட்டு விளையாடி வருகின்றனர். நல்லது நடக்கட்டும். ஈரானுக்கும் தகுந்த பதிலடி கிடைக்கும்


Kasimani Baskaran
அக் 02, 2024 05:38

தீவிரவாதத்தால் ஒன்றிணையும் தேசங்கள் உலகத்தை தீவிரவாத கூடாரமாக மாற்ற முயல்கிறார்கள். அவர்களை அழிக்கவில்லை என்றால் உலகத்துக்கு சமாதானம் வரவே வராது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை