உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடல் வழியை மூட ஈரான் முடிவு: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு

கடல் வழியை மூட ஈரான் முடிவு: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் பார்லிமென்ட் அனுமதி அளித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.மேற்காசிய நாடுகளான ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், 10வது நாளாக இன்றும் தொடர்கிறது. அணு ஆயுதத் தயாரிப்புக்கு தயாராவதாகக் கூறி, ஈரான் மீது இஸ்ரேல் கடந்த, 13ம் தேதி தாக்குதலை துவங்கியது. தற்போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய நிலையில், ஹோர்முஸ் நீரிணைப்பு கடல் வழித்தடத்தை மூடுவதற்கு ஈரான் பார்லிமென்ட் அனுமதி வழங்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கான முக்கிய கடல் வழியாக ஹோர்முஸ் நீரிணைப்பு உள்ளது.உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணைப்பு வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஹோர்முஸ் சர்வதேச வர்த்தகத்திற்கான மிகவும் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றாகும். எனவே, அதன் மூடல் உலகளாவிய வர்த்தகத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல் விலைகளும் உயரும். இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீதான தாக்குதல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rajan A
ஜூன் 23, 2025 07:39

இது எதிர்ப்பார்த்தது தான். இப்போ சமரசம் பேச எல்லா நாடுகளும் வரும்


Kasimani Baskaran
ஜூன் 23, 2025 04:12

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி நிலைமையை சமாளிக்கும். அதை காரணம் காட்டி இந்தியாவிடம் பாய வாய்ப்பு இருக்கிறது.


ramesh
ஜூன் 22, 2025 21:34

இது நமது எண்ணெய் நிறுவனங்களுக்கு சந்தோஷமான செய்தி .இதை காரணம் காட்டி விலையை அதிக அளவு உயர்த்தி விடும் . பிறகு கச்சா என்னை விலை குறையும் போது நிச்சயமாக வழக்கம் போல குறைக்க மாட்டார்கள் . மக்களின் பணம் சுரண்ட படும் . அப்போது இங்கே கருத்து போடும் கிணற்று தவளைகள் மூச்சு காட்டாது


vivek
ஜூன் 23, 2025 07:53

திராவிட ஓசி பஸ்சில் போகும் உனக்கென்ன கவலையோ....


Nada Rajan
ஜூன் 22, 2025 21:18

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் கட்டுப்படி ஆகாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை