உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் ஒப்புதல்

ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்புக்கு எதிராக நடக்கும் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் சிறப்பு தூதர் விட்காப் கொண்டு வந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஆண்டு அக்., 7 ல் மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்தம் அமலானது. ஆனால், அதில் ஒப்பந்தப்படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை துவக்கி உள்ளது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், இந்த போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு அறிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனிடையே, இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த ஆவணம் தங்களுக்கு கிடைத்து உள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து வருவதாகவும் ஹமாஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.இந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

John
மே 30, 2025 06:58

No statement from American President Mr Trump!!!


Kasimani Baskaran
மே 30, 2025 04:08

மனிதாபிமானம் பார்த்துதான் இஸ்ரேல் நாசமாகிக்கொண்டு இருக்கிறது.. இந்தியாவும் அதை காப்பி அடித்து நாசமாகிக்கொண்டு இருக்கிறது. தீவிரவாதிகள் மனநலம் பாதிக்கப்பட்ட, போதையில் இருக்கும் பயித்தியக்காரர்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுப்போர் அதை விட கேவலமானவர்கள்.


Thravisham
மே 30, 2025 08:35

Karrect


Thravisham
மே 30, 2025 08:35

கரரெக்ட்


சோலை பாரத்தி
மே 29, 2025 22:33

ஐயோ வேணாம்.. அவனுகள அழிச்சா தான் இந்த உலகம் நிம்மதியாக இருக்கும்


முக்கிய வீடியோ