உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்

போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்

வாஷிங்டன்: லெபனான் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமரிடம் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். போரை நிறுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவிடம் தொலை பேசி வாயிலாக பேசினார்.இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய கிழக்கில் முழுதுவமாக போரை நிறுத்த வேண்டும் என்பதை எனது எண்ணம். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவிடம் பேச முடிவு செய்துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
அக் 01, 2024 05:32

ஹமாசையும் போரை நிறுத்தச்சொல்லலாமே.. ஏன் இஸ்ரேல் மட்டும் நிறுத்த வேண்டும்?


J.V. Iyer
அக் 01, 2024 02:58

பயங்கரவாதிகள் எல்லா இஸ்ரேலி பிணைக்கைதிகளையும் விடுவித்தால் உடனே போர்நிற்கும். இது ஒரு குழந்தைக்கும் தெரியும். ஏன் கண்துடைப்பு?


யுகலேஷ்
அக் 01, 2024 02:02

நான் அழுவுற மாதிரி அழுவுறேன். நீ அடிக்காத மாதிரி அடி. ரெண்டுபேரும் அப்புறமா குஞ்சாலாடு சாப்புடுவோம். ஐ.நா வுக்கு அல்வா குடுப்போம்.


N Sasikumar Yadhav
அக் 01, 2024 00:04

பயங்கரவாத கும்பலுங்க அழிந்து உலகம் அமைதியாகும்லரை உலக நாடுகள் இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை